Enge En Punnagail (From “Thaalam”)

எங்கே என் புன்னகை?
எவர் கொண்டுப் போனது
எங்கே என் புன்னகை?
எவர் கொண்டுப் போனது?
தீப் பட்ட மேகமாய்
என் நெஞ்சு ஆனது
மேகத்தீ அணைக்க
வா வா வா வா

தாளத்தில் நீ சேர வா
வா வா
தாழிசை நான் பாடவா?

எங்கே என் புன்னகை?
எவர் கொண்டுப் போனது?
தீப் பட்ட மேகமாய்
என் நெஞ்சு ஆனது
மேகத்தீ அணைக்க
வா வா வா வா

தாளத்தில் நீ சேர வா
வா வா
தாழிசை நான் பாடவா?

மழை நீரில் தேகமோ
தெப்பம் போல் நனைந்தது
தெப்பம் போல் நனைந்ததில்
வெட்கம் ஏன் கரைந்தது?

மழை நீரில் தேகமோ
தெப்பம் போல் நனைந்தது
தெப்பம் போல் நனைந்ததில்
வெட்கம் ஏன் கரைந்தது?

இன்னாடிப் போலவே
என் நெஞ்சம் குழைந்தது
நீ செய்யும் லீலையை
நேர் செய்ய மனம் ஏங்குது
முகில் ஆழம் நனைந்ததே
முத்தத்தால் காய வை
என்தன் தனிமையை தோள் செய்ய வா

தாளத்தில் நீ சேர வா, ஓஓ
தாழிசை நான் பாடவா?

பனிச் சிந்தும் சூரியன்
அது உன்தன் பார்வையோ?
பூக்களின் இராணுவம்
அது உன்தன் மேனியோ?

பனிச் சிந்தும் சூரியன்
அது உன்தன் பார்வையோ?
பூக்களின் இராணுவம்
அது உன்தன் மேனியோ?

கண்ணே உன் நெஞ்சமோ
கடல் கொண்ட ஆழமோ?
நம் சொந்தம் கூடுமோ?
ஒளியின் நிழலாகுமோ?

காதல் மழைப் பொழியுமோ?
கண்ணீரில் நிரம்புமோ?
அது, காலத்தின் முடிவல்லவோ?

தாளத்தில் நீ சேர வா, ஓஓ
தாழிசை நான் பாடவா?

எங்கே என் புன்னகை?
எவர் கொண்டுப் போனது?
தீப் பட்ட மேகமாய்
என் நெஞ்சு ஆனது
மேகத்தீ அணைக்க
வா வா வா வா

தாளத்தில் நீ சேர வா
வா வா
தாழிசை நான் பாடவா?

தாளத்தில் நீ சேர வா
வா வா
தாழிசை நான் பாடவா?
தாளத்தில் நீ சேர வா
வா வா
தாழிசை நான் பாடவா?
தாளத்தில் நீ சேர வா
வா வா



Credits
Writer(s): A R Rahman, Vairamuthu
Lyrics powered by www.musixmatch.com

Link