En Uyir Thozhiye

என்னுயிர் தோழியே, என்னுயிர் தோழியே
என்னுயிர் தோழியே, என்னுயிர் தோழியே

என்னுயிர் தோழியே
நான்கைந்து சூரியன்
ஆறேழு வெண்ணிலா வந்ததென்ன
என் வானம் புதுமையாய் ஆனதென்ன

இது விஞ்ஞான மாற்றமா
மெய்ஞான மாற்றமா
என்னுள்ளே நடந்தது
என்ன என்ன...

இனியவளே அமைதி புரட்சி
ஒன்று நடந்ததே
உன் விழிகள் இங்கே புதிய உலகம்
ஒன்றை திறந்ததே ஒ

ஒற்றை ஜடையில் உன்னை கட்டி
எடுத்து வந்து வைப்பேன்
எனது கள்ள சிரிப்பழகில்
காயம் செய்து பார்ப்பேன்

தீ பிடித்த தங்க மீனை
பார்த்ததுண்டா
என்னை நீயும் தான்
பார்த்து கொள்வாய்
கத்தி வீசும் வானவில்லை
கண்டதுண்டா
என்னை வந்து நீ கற்று கொள்வாய்

ஒரு நஞ்சும் உண்டு
அமுதும் உண்டு கண்ணில்
நீ ரெண்டும் உண்டு
மோட்சம் கொண்டு போ போ
என் ஆசை தீர்ந்தது

என்னுயிர் தோழியே
நான்கைந்து சூரியன்
ஆறேழு வெண்ணிலா வந்ததென்ன
என் வானம் புதுமையாய் ஆனதென்ன

இது விஞ்ஞான மாற்றமா
மெய்ஞான மாற்றமா
என்னுள்ளே நடந்தது
என்ன என்ன...

கண்ணில் விழுந்தவளே
நெஞ்சை துளைக்குது உன் கர்வம்
எனது சித்தம் உடைத்தவளே
சரணடைகிறேன் சர்வம்

மூச்சு முட்ட
கவிதைகள் குடித்துவிட்டு
எந்தன் செவியில் சிந்துகிறாய்

ரெண்டு இதழ் மட்டும்
கொண்ட அதிசய பூ
நீ அல்லவோ சிலுப்புகிறாய்

ஒரு கப்பல் போலே
உன்னை மோதி சென்றேன்
துறை முகமும் நானே
உடனே தானே
தூள் தூள் தூள் ஆனதுண்மை

என்னுயிர் தோழியே
நான்கைந்து சூரியன்
ஆறேழு வெண்ணிலா வந்ததென்ன
என் வானம் புதுமையாய் ஆனதென்ன

இது விஞ்ஞான மாற்றமா
மெய்ஞான மாற்றமா
என்னுள்ளே நடந்தது
என்ன என்ன...

உன் உயிர் தோழியே
உன் உயிர் தோழியே
உன் இடம் தேடியே வந்ததென்ன
உன் உள்ளங்கை ரகசியம் என்ன என்ன

இது விஞ்ஞான ஆட்டமா
மெய்ஞான ஆட்டமா
நம்முள்ளே நடப்பது என்ன என்ன
என்ன என்ன



Credits
Writer(s): Pa. Vijay, A R Rahman
Lyrics powered by www.musixmatch.com

Link