Enna Indha Matrammo

என்ன இந்த மாற்றமோ எம்மனசு வழுக்குதே
கண்ணுரெண்டும் காந்தமோ என்னக்கட்டி இழுக்குதே
உன் பூ முகத்தில் என் தாய் முகத்தை நான் பார்த்தேனே
உன் ஞாபகத்தை என் ஆயுள்வரை நான் சேர்ப்பேனே
நீ வந்ததும் என்னானதோ
என் வாழ்க்கையே வேறானதோ
என்ன இந்த மாற்றமோ எம்மனசு வழுக்குதே
கண்ணுரெண்டும் காந்தமோ என்னக்கட்டி இழுக்குதே
உன் புன்சிரிப்பில் என் உலகத்தையே நான் பார்த்தேனே
உன் ஞாபகத்தை என் ஆயுள் வரை நான் சேர்ப்பேனே
நீ வந்ததும் என்னானதோ
என் வாழ்க்கையே வேறானதோ

சின்னச்சின்னப் புன்னகையில் என்னைப்பரித்தாய்
வண்ண வண்ண கனவுகள் கண்ணில் கொடுத்தாய்
சிறிய இதயத்தில் பெரிய காதலை தந்தாயடி என் அன்பே
மெல்ல மெல்ல மனசுக்குள் இடம் பிடித்தாய்
மின் மினிக்கும் மின்னலைப்போல் ஒளிக்கொடுத்தாய்
உறங்கும் நேரத்தில் நினைவின் ஓரத்தில்
வந்தாயடா என் அன்பே
ஒரு பார்வைப் பார்க்கும்போதிலே
எந்தன் தாகம் வானம் ஏறுதே
மறு பார்வைப் பார்க்கும் போதிலே
எந்தன் ஜென்ம சாபம் தீருதே
என் கால் கொலுசு உன் பேரைச்சொல்ல நான் கேட்டேனே
நீ வந்ததும் என்னானதோ
என் வாழ்க்கையே வேறானதோ
என்ன இந்த மாற்றமோ எம்மனசு வழுக்குதே
கண்ணுரெண்டும் காந்தமோ என்னக்கட்டி இழுக்குதே

சுற்றி உந்தன் முகம் அன்றி ஏதும் இல்லையே
மற்றபடி வேற ஒன்னும் தொல்லை இல்லையே
உயிரை எடுக்கிறாய் திரும்பக்கொடுக்கிறாய்
திண்டாடுதே என் நெஞ்சம்
நெற்றிப்பொட்டில் நேற்றுவரைக் காய்ச்சல் இல்லையே
நட்சத்திரம் பார்த்து நானும் பேசவில்லையே
உயிரில் குதிக்கிறாய் நீச்சல் அடிக்கிறாய்
கொண்டாடுதே என் நெஞ்சம்
உனைப்பார்த்துக் கொஞ்சிப்பேசத்தான்
எந்தன் ஆசைத்தாவி ஓடுதே
உனைப்பார்த்துப் பேசும் நேரத்தில்
எந்தன் வார்த்தை ஊமையாகுதே
கண் பார்வை ரெண்டும் சொல்லாததையா
உன் இதழ்கள் சொல்லும்
நீ வந்ததும் என்னானதோ
என் வாழ்க்கையே வேறானதோ
என்ன இந்த மாற்றமோ எம்மனசு வழுக்குதே
கண்ணுரெண்டும் காந்தமோ என்னக்கட்டி இழுக்குதே
உன் பூ முகத்தில் என் தாய் முகத்தை நான் பார்த்தேனே
உன் ஞாபகத்தை என் ஆயுள்வரை நான் சேர்ப்பேனே
நீ வந்ததும் என்னானதோ
என் வாழ்க்கையே வேறானதோ



Credits
Writer(s): Karthik
Lyrics powered by www.musixmatch.com

Link