Yeh Nambane (From "Mounam Pesiyathe")

ஹே நண்பனே கோபம் கொள்ளாதே
காதலை தூரம் தள்ளாதே
பொய் கோபமா சும்மா போகாதே
வாலிபம் மீண்டும் சிக்காதே

கண்ணுக்குள் வண்ணம் பூசி ரசிக்கும்
நெஞ்சுக்குள் சிறகுகள் முளைக்கும்
பூமியை கூட இது சுமக்கும்
வானத்தை தாண்டி இது பறந்திடுமே

ஹே நண்பனே கோபம் கொள்ளாதே
காதலை தூரம் தள்ளாதே
பொய் கோபமா சும்மா போகாதே
வாலிபம் மீண்டும் சிக்காதே

ஆதாம் ஏவாள் தந்தது இது
அன்பை சொல்ல வந்தது இது
ஆதாம் ஏவாள் தந்தது இது
அன்பை சொல்ல வந்தது இது,
காதல் இன்றி வாழ்ந்து விட முடியாதே

உயிரில் மின்சாரம் செலுத்துமடா
அசந்தால் தீ வைத்து கொளுத்துமடா
ஆணை பெண்ணாக்கி சிரிக்குமடா
இந்த காதல் தரும் திருமணம் தோற்க்குமடா

காதலர்கள் செய்யும் தப்பாலே
காதல் மேலே குற்றம் சொல்லாதே
காதல் மட்டும் நெஞ்சில் வந்தாலே
நீ பறப்பாய் இந்த மண் மேலே

காதல் நஞ்சை உண்டுவிட்டால்
காக்கும் மருந்து எதுவுமில்லை
காதல் நஞ்சை உண்டுவிட்டால்
காக்கும் மருந்து எதுவுமில்லை
காதல் போல துன்பம் ஒன்று கிடையாதே

நேற்று இன்றில்லை அறிந்து கொள்ளு
நாளை உனை ஆளும் புரிந்து கொள்ளு
காதல் விஷமில்லை தெரிந்து கொள்ளு
இந்த காதலுக்குள் நட்பு உண்டு உணர்ந்து கொள்ளு

கற்பனையில் நீயும் வாழாதே
காதலை காவியம் ஆக்காதே
கானல் நீரில் தாகம் தீராதே
காதலை சும்மா நீயும் நம்பாதே...



Credits
Writer(s): Vaalee, Yuvan Shankar Raja
Lyrics powered by www.musixmatch.com

Link