Nenjorathil

நெஞ்சோரத்தில் என் நெஞ்சோரத்தில்
என்னை அறியாமல் நுழைந்துவிட்டாய்... ஓ
கடிகாரத்தில் துளி நொடி நேரத்தில்
எந்தன் உயிரோட கலந்துவிட்டாய்... ஓ
எனக்கென்னானதோ மனம் தடுமாறுதோ
விழி உனைத் தேடித்தானோடுது தேடுது... ஓ

நெஞ்சோரத்தில் என் நெஞ்சோரத்தில்
என்னை அறியாமல் நுழைந்துவிட்டாய்... ஓ
என் காலடி மண்ணில் பதிந்தாலும்
நான் நூறடி உயரம் மிதக்கிறேன்
நீ ஓரடி தூரப் பிரிந்தாலும்
என் உயிரில் வலியை உணர்கிறேன்

புது கொள்ளைக்காரன் நீயோ
என் நெஞ்சைக் காணவில்லை
நான் உன்னைக்கண்ட பின்னால்
என் கண்கள் தூங்கவில்லை
விழிகளில் பொழிந்தாய் இருவரும் இருக்க
ஒரு துளி மழையில் இருவரும் பழிக்க
ஏனிந்த ஆசை ஆயிரம் ஆசை
எனை மயக்கிவிட்டாயே

நெஞ்சோரத்தில் என் நெஞ்சோரத்தில்
என்னை அறியாமல் நுழைந்துவிட்டாய்... ஓ
உன் கைகள் தொட்ட இடம் பார்த்து
நான் ஆயிரம் முத்தம் குடிக்கிறேன்
சிறு காகிதம் கையில் கிடைத்தாலும்
உன் பேரை எழுதி ரசிக்கிறேன்

உன் கண்ணை உற்றுப் பார்த்தால்
லட்சம் வார்த்தை சொல்லும்
அதில் ஏதோ ஒன்று என்னை
எங்கோ தூக்கிச் செல்லும்

ஒரு பிடி பிடித்து இருவரும் நடக்க
விரல் நுனி உரசி வீதியைக் கடக்க
ஏனிந்த ஆசை ஆயிரம் ஆசை
எனை மயக்கிவிட்டாயே

நெஞ்சோரத்தில் என் நெஞ்சோரத்தில்
என்னை அறியாமல் நுழைந்துவிட்டாய்... ஓ
எனக்கென்னானதோ மனம் தடுமாறுதோ
விழி உனைத் தேடித்தானோடுது தேடுது... ஓ
நெஞ்சோரத்தில்



Credits
Writer(s): Vijay Antony, Annamalai N
Lyrics powered by www.musixmatch.com

Link