Oru Mani Adithaal

ஒரு மணி அடித்தால் கண்ணே உன் ஞாபகம்
Telephone குயிலே வேண்டும் உன் தரிசனம்
போதும் கண்ணே நீ நடத்தும் நாடகமே
தூங்கும் போதும் தூங்கவில்லை உன் ஞாபகமே
பாடினால் அந்த பாடலின் ஸ்வரம் நீயடியோ
தேடினால் விழி ஈரமாவது ஏனடியோ

ஒரு மணி அடித்தால் கண்ணே உன் ஞாபகம்
Telephone குயிலே வேண்டும் உன் தரிசனம்

வாசம் மட்டும் வீசும் பூவே
வண்ணம் கொஞ்சம் காட்டுவாயா
தென்றல் போல எங்கும் உன்னைத் தேடுகிறேன்
நான் தேடுகிறேன்
தேடி உன்னைப் பார்த்துப் பார்த்து
கண்கள் ரெண்டும் வேர்த்து வேர்த்து
சிந்தும் விழி நீரில் நானே மூழ்குகிறேன்
நான் மூழ்குகிறேன்
வீசிடும் புயல் காற்றிலே நான் ஒற்றை சிறகானேன்
காதலின் சுடும் தீயிலே நான் எரியும் இறகானேன்
மேடைதோறும் பாடல் தந்த வான்மதியே
ஜீவன் போகும் முன்பு வந்தால் நிம்மதியே
போதும் கண்ணே நீ நடத்தும் நாடகமே
தூங்கும் போதும் தூங்கவில்லை உன் ஞாபகமே

ஒ... ஒரு மணி அடித்தால் கண்ணே உன் ஞாபகம்
Telephone குயிலே வேண்டும் உன் தரிசனம்

உந்தன் முகம் பார்த்த பின்னே
கண்ணிழந்து போவதென்றால்
கண் இரண்டும் நானிழப்பேன் இப்போதே
நான் இப்போதே
உந்தன் முகம் பார்க்கும் முன்னே
நான் மறைந்து போவதென்றால்
கண்கள் மட்டும் அப்பொழுதும் மூடாதே
இமை மூடாதே
காதலே என் காதலே
எனை காணிக்கை தந்துவிட்டேன்
சோதனை இனி தேவையா
சுடும் மூச்சினில் வெந்து விட்டேன்
காதல் என்னும் சாபம் தந்த தேவதையே
காணலாமோ ராகம் நின்று போவதையே
போதும் கண்ணே நீ நடத்தும் நாடகமே
தூங்கும் போதும் தூங்கவில்லை உன் ஞாபகமே

ஒரு மணி அடித்தால் கண்ணே உன் ஞாபகம்
Telephone குயிலே வேண்டும் உன் தரிசனம்



Credits
Writer(s): Deva, Palaniappan Bharathi
Lyrics powered by www.musixmatch.com

Link