Azhagiya Asura

வச்சிக்கவா ஒன்ன மட்டும் நெஞ்சுக்குள்ள
சத்தியமா நெஞ்சுக்குள்ள ஒன்னுமில்ல
வச்சிக்கவா ஒன்ன மட்டும் நெஞ்சுக்குள்ள
சத்தியமா நெஞ்சுக்குள்ள ஒன்னுமில்ல

சொக்கத்தங்க தட்டப் போல
செவ்வரளி மொட்டப் போல
வந்தப்புள்ள சின்னப்புள்ள
வாலிபத்து கன்னிப்புள்ள
வச்சிக்கவா ஹே வச்சிக்கவா

வச்சிக்கவா ஒன்ன மட்டும் நெஞ்சுக்குள்ள
சத்தியமா நெஞ்சுக்குள்ள ஒன்னுமில்ல
போக்கிரிங்க பல் ஒடச்சி
பொரிக்கிகள மூக்குடச்சி
வெற்றிகள கண்டவனே
என் மனச கொண்டவனே
வச்சிக்கவா வச்சிக்கவா

வச்சிக்கவா ஒன்ன மட்டும் நெஞ்சுக்குள்ள
சத்தியமா நெஞ்சுக்குள்ள ஒன்னுமில்ல ஹோ

என்ன கத வேணும் சொல்லி தருவேன்
எந்த வழி வேணும் அள்ளி தருவேன்
என்ன கத வேணும் சொல்லி தருவேன்
எந்த வழி வேணும் அள்ளி தருவேன்

பொம்பளைங்க கேட்டா
நான் தட்டினது இல்ல
வேண்டியதை நீ கேளம்மா

பொட்டுவச்ச மானு
உன்ன தொட்டுக்கிட்டேன் நானு
நாளு இது திருநாள் அய்யா

பூலோகம் மேலோகம்
ஒன்னாக பாப்போமா
வா புள்ள ராசாத்தி
உன் ஜோடி நானாச்சி
வச்சிக்கவா வச்சிக்கவா

வச்சிக்கவா ஒன்ன மட்டும் நெஞ்சுக்குள்ள
சத்தியமா நெஞ்சுக்குள்ள ஒன்னுமில்ல ஹே
செங்கரும்புச் சாற கொண்டு வரவா
சித்தெறும்பு போல ஊர வரவா
செங்கரும்புச் சாற கொண்டு வரவா
சித்தெறும்பு போல ஊர வரவா

தொட்டு விளையாடு
நீ கட்டழகியோடு
தங்கு தட யேதுமில்ல

வெட்டி வெட்டிப் பேச
ஏ கொட்டுதடி ஆச
நான் தொட்டுகிட்டா பாவம் இல்ல

கைராசி முகராசி
எல்லாமே உன் ராசி
உன்னோட நான் சேர்ந்தா
நான் தானே சுகவாசி
வச்சிக்கவா வச்சிக்கவா

வச்சிக்கவா ஒன்ன மட்டும் நெஞ்சுக்குள்ள
சத்தியமா நெஞ்சுக்குள்ள ஒன்னுமில்ல

போக்கிரிங்க பல் ஒடச்சி
பொரிக்கிகள மூக்குடச்சி
வெற்றிகள கண்டவனே
என் மனச கொண்டவனே

வச்சிக்கவா ஒன்ன மட்டும் நெஞ்சுக்குள்ள
சத்தியமா நெஞ்சுக்குள்ள ஒன்னுமில்ல
வச்சிக்கவா ஒன்ன மட்டும் நெஞ்சுக்குள்ள
சத்தியமா நெஞ்சுக்குள்ள ஒன்னுமில்ல ஹா



Credits
Writer(s): Thamarai, Immanuel Vasanth Dinakaran
Lyrics powered by www.musixmatch.com

Link