Andha Vaanam Enthan Kaiyil

ஆஹா-ஹா-ஹ-ஹா-ஹ-ஹா-ஹ
ஹா-ஹ-ஹா-ஹ
ஆஹா-ஹா-ஹ-ஹா-ஹ-ஹா-ஹ
ஹா-ஹ-ஹா-ஹ

அந்த வானம் எந்தன் கையில் வந்து சேரும்
புது சொர்க்கம் ஒன்று லாலி சொல்லி பாடும்
விளக்கேற்றுதே கவிதா திரி
மனம் ஓடுதே நதி மாதிரி
சுக சந்தம் அள்ளி தந்ததிந்த பூங்கொடி

அந்த வானம் எந்தன் கையில் வந்து சேரும்
புது சொர்க்கம் ஒன்று லாலி சொல்லி பாடும்

சோலை பூக்கள் மாலை ஆகும் நேரம்
நான் போகும் பாதை யாவும் ஆகும் பிருந்தாவனம்
வாழும் தனிமை காலம் விலகி போகும்
இனி ஆசை கிளிகள் கூடும் இன்ப சரணாலயம்
வார்த்தைகள் கொடி ஏற்றுமே
வான் நிலா முடி சூட்டுமே
நான் பாடும் பாடல் கீதை போல வாழுமே

அந்த வானம் எந்தன் கையில் வந்து சேரும்
புது சொர்க்கம் ஒன்று லாலி சொல்லி பாடும்

தானத் தந்தன தாளம் தந்தது தென்றல்
அதை கேட்டு மூங்கில் ஆனதிங்கு புல்லாங்குழல்
வீசும் மல்லிகை வாசம் தந்தது கீதம்
அதை பாடும் போது நெஞ்சம் தேடும் சிறகாயிரம்
ஆடிடும் வெறும் காகிதம்
ஆகுமே ஒரு காவியம்
ஒளி மின்னல் வந்து தோரணங்கள் சூடிடும்

அந்த வானம் எந்தன் கையில் வந்து சேரும்
புது சொர்க்கம் ஒன்று லாலி சொல்லி பாடும்
விளக்கேற்றுதே கவிதா திரி
மனம் ஓடுதே நதி மாதிரி
சுக சந்தம் அள்ளி தந்ததிந்த பூங்கொடி

அந்த வானம் எந்தன் கையில் வந்து சேரும்
புது சொர்க்கம் ஒன்று லாலி சொல்லி பாடும்



Credits
Writer(s): Pazhani Bharathi, Sirpi
Lyrics powered by www.musixmatch.com

Link