Yezhelu Jenma Bandham (Male Vocals)

ஏழேழு ஜென்ம பந்தம் மனைவி என்பது
இதில் நீ வேறு நான் வேறு யார் சொன்னது
கல்யாணமே
ஒரு தெய்வீகமே
சம்சாரமே
அதன் சந்தோசமே!
ஒரு வானும் நிலவும்
பிரிந்து வாழுமா...?
ஏழேழு ஜென்ம பந்தம் மனைவி என்பது
இதில் நீ வேறு நான் வேறு யார் சொன்னது

வெத்திலையில் பாக்கு வச்சு
பத்து பேரை சாட்சி வச்சு
தித்திக்கிற ஆசைக்கெல்லாம்
தேதி ஒன்னு உருவாச்சு
அஃநிய சாட்சி வச்சு கை விரலை சேத்து வச்சு
இன்பம் துன்பம் இரண்டிலுமே
இணைந்திருக்க முடிவாச்சு
பள்ளியறை பள்ளியிலே படிக்கும் இன்ப வேதம்
பிள்ளை மணிச் செல்வங்களே அன்னை தந்த கீதம்
இது பழங்கால பாதை ஒரு சுக வாழ்வின் கீதை
ஏழேழு ஜென்ம பந்தம் மனைவி என்பது
இதில் நீ வேறு நான் வேறு யார் சொன்னது

சந்தனத்து மழை அடிக்க
சந்திரனும் கொடை புடிக்க
செங்கமலச் சூரியன் போல்
செல்ல மகன் பிறப்பானே!
தங்கத்திலே தூளி கட்டி
வைரத்திலே மாலை கட்டி
தத்தி வரும் பாதத்துக்கு
முத்து மணி கொடுப்பேனே
துள்ளி வரும் பிள்ளை நிலா தூய கங்கை மீனு
செம்பவள வாய் திறந்தால்
சிந்தி சிதறும் தேனு
நம் பேர் சொல்ல தானே
பிறக்கும் ஒரு மானே
ஏழேழு ஜென்ம பந்தம் மனைவி என்பது
இதில் நீ வேறு நான் வேறு யார் சொன்னது
கல்யாணமே
ஒரு தெய்வீகமே
சம்சாரமே
அதன் சந்தோசமே!
ஒரு வானும் நிலவும் பிரிந்து வாழுமா?
ஏழேழு ஜென்ம பந்தம் மனைவி என்பது
இதில் நீ வேறு நான் வேறு யார் சொன்னது



Credits
Writer(s): Deva, Kaalidaasan Kaalidaasan
Lyrics powered by www.musixmatch.com

Link