Un Marbile Vizhi Moodi

ஆசை நாயகனே சௌக்கியமா
உந்தன் நலம் நாடும்
பிரியமானவளின் கடிதம்

உன் மார்பில் விழி மூடி தூங்குகிறேன்
தினமும் கனவில்
உன் ஆசை முகம் தேடி ஏங்குகிறேன்
விடியும் பொழுதில்

எந்தன் வளையல் குலுங்கியது
கொலுசும் நழுவியது
வெக்கத்தில் கன்னங்கள் கூசியது
மனம் காலடி ஓசையை
எதிர்பார்த்து துடிக்கின்றது அன்பே

உன் மார்பில் விழி மூடி தூங்குகிறேன்
தினமும் கனவில்

சின்னக் குயில்கள்
உனை உனை நலம் கேட்குதா
நெஞ்சில் பரவும்
அலை அலை உனை ஈரம் ஆக்குதா

மெல்ல நகரும்
பகல் பகல் யுகம் ஆகுதா
மூச்சு விட்டதால் தலையணை
அது தீயில் வேகுதா

நெஞ்சம் எதிலும் ஒட்டாமல்
கண்ணில் கனவும் வற்றாமல்
தினமும் தினமும் உருகும் மனது
ஏன் இந்த நிலைமை தெரியவில்லை
இந்தப் பரவசம் உனக்குள்ளும் இருக்கிறதா அன்பே

உன் மார்பில் விழி மூடி தூங்குகிறேன்
தினமும் கனவில்
உன் ஆசை முகம் தேடி ஏங்குகிறேன்
விடியும் பொழுதில்

காலை வெயில் நீ பனித்துளி இவள் அல்லவா
என்னைக் குடித்து இனி இனி உன் தாகம் தீர்க்கவா
துள்ளும் நதி நீ இவள் அதில் நுரை அல்லவா
இருவருக்கும் இடைவெளி இனி இல்லை அல்லவா

நிலவில் வேகம் உன்னாலே
வருவாய் எந்தன் முன்னாலே
அழகும் உயிரும் உனக்கே சொந்தம்
ஏராளம் ஆசை நெஞ்சில் உண்டு
அதை எழுதிட நாணங்கள் தடுக்கிறதே அன்பே

உன் மார்பில் விழி மூடி தூங்குகிறேன்
தினமும் கனவில்
உன் ஆசை முகம் தேடி ஏங்குகிறேன்
விடியும் பொழுதில்



Credits
Writer(s): Palani Bharathi
Lyrics powered by www.musixmatch.com

Link