Kaathal Enum

ஹா-ஆ-அ-ஆ-ஆ-ஆ-அ
ஹோ-ஓ-ஒ-ஓ-ஒ-ஓ-ஓ-ஒ
ஹோ-ஓ-ஹோ-ஓ-ஒ-ஓ-ஒ

காதல் என்னும் வேதம்
இங்கு கண்ணீரில் வாடுதம்மா
நடுக் கானகத்தில் கண் விழித்து
பொன் மானைத் தேடுதம்மா
என் ஆவியே வேகுதே புண்ணாகியே போனதே
அன்பாலே தவிக்குதடி என் நெஞ்சு துடிக்குதடி

காதல் என்னும் வேதம்
இங்கு கண்ணீரில் வாடுதம்மா
நடுக் கானகத்தில் கண் விழித்து
பொன் மானைத் தேடுதம்மா

பாட்டெடுத்து கற்றுக் கொடுத்து
பாட வைத்ததும் ஏனடியோ
மேடையிலே பாட வந்தால்
மூடி வைத்ததும் ஏனடியோ
நேற்றைய கனவெல்லாம்
காற்றின் கதை தானோ
அரங்கேற்றம் காணாத
ஒரு பாட்டின் பொருள் தானோ
புத்தம் புது புத்தகம் செல்லரித்துப் போகுமா
சிங்காரப் பைங்கிளியே

காதல் என்னும் வேதம்
இங்கு கண்ணீரில் வாடுதம்மா
நடுக் கானகத்தில் கண் விழித்து
பொன் மானைத் தேடுதம்மா

என் ஆவியே வேகுதே புண்ணாகியே போனதே
அன்பாலே தவிக்குதடி என் நெஞ்சு துடிக்குதடி

காதல் என்னும் வேதம்
இங்கு கண்ணீரில் வாடுதம்மா
நடுக் கானகத்தில் கண் விழித்து
பொன் மானைத் தேடுதம்மா

ஹா.ஆஆஆஅ.ஆ.ஹா.ஆ
ஹோ ஓஒ ஓ ஓ ஹாஆஆ.ஆ

களங்கம் இல்லா மனதினிலே
காலை வைத்தது யாரடியோ
கலங்கி நின்ற போதினிலே
கல்லெறிந்ததும் ஏனடியோ
அழகாய் அகல் விளக்கை
அங்கு யாரோ ஏற்றி வைத்தார்
அலை வீசும் சுடர் ஒளியை
திரை போட்டே மூடி வைத்தார்
இந்தத் திரை விலகும் இன்பக் கதை தொடரும்
சிங்காரப் பைங்கிளியே

காதல் என்னும் வேதம்
இங்கு கண்ணீரில் வாடுதம்மா
நடுக் கானகத்தில் கண் விழித்து
பொன் மானைத் தேடுதம்மா
என் ஆவியே வேகுதே புண்ணாகியே போனதே
அன்பாலே தவிக்குதடி என் நெஞ்சு துடிக்குதடி

காதல் என்னும் வேதம்
இங்கு கண்ணீரில் வாடுதம்மா
நடுக் கானகத்தில் கண் விழித்து
பொன் மானைத் தேடுதம்மா



Credits
Writer(s): Pulamaipithaan, Shankar Ganesh
Lyrics powered by www.musixmatch.com

Link