Satrum Kidaitha

சற்றுமுன் கிடைத்த தகவல்படி
தொலைந்துபோனது என் இதயமடி
உயிரே என் உயிரே என் உயிரே உயிரே

சற்றுமுன் கிடைத்த தகவல்படி
தொலைந்துபோனது என் இதயமடி
உயிரே என் உயிரே என் உயிரே உயிரே

உற்று பார்க்கும் விதம் புரிந்ததடி
இளமை சிறகடித்து பறந்ததடி
உயிரே என் உயிரே என் உயிரே உயிரே
நிலை மாறாமல் தலை சாயாமல் அடி உனக்கே வாழ்ந்திருப்பேன்

சற்றுமுன் கிடைத்த தகவல்படி
தொலைந்துபோனது என் இதயமடி
உயிரே என் உயிரே என் உயிரே உயிரே

மாளிகையாய் மலர் மாளிகையாய்
உன் மனதினை அலங்கரிப்பேன்
தேவி உந்தன் கண்களில்
நான் தினசரி அவதரிப்பேன்

தீவிரமாய் தினம் தீவிரமாய் உன் தேடலை அனுமதிப்பேன்
தீண்டும் போது நேர்ந்திடும் உன் தவறுகள் அனுசரிப்பேன்
முதல் நாள் எனை தீட்டினாய் மறுநாள் உயிர் பூட்டினாய்
சங்கத் தமிழ் போல உன் மனம் சங்கமிக்கும் போது சந்தனம்
இதழ் ஊராமல் இமை தேடாது உன் நினைவால் நிலைத்திருப்பேன்

சற்றுமுன் கிடைத்த தகவல்படி
தொலைந்துபோனது என் இதயமடி
உயிரே என் உயிரே என் உயிரே உயிரே

யாத்திரைகள் என் யாத்திரைகள் உன் விழிகளில் நிகழ்கிறதே
ஆசை கேட்கும் கேள்விகள் அட நண்பகல் குளிர்கிறதே
ராத்திரிகள் என் ராத்திரிகள் மிக ரகசியம் ஆகிறதே
நாளும் பூக்கும் ஞாபகம் அட வன்முறை பேசியதே

எதனால் இமை பார்த்தது? எதனால் இதழ் கோர்த்தது?
வங்கக்கடல் ஈரம் போகுமா? இந்த புதிர் காதல் ஆகுமா?
இமை மூடாமல் இரை தேடாமல் உன் உணர்வால் விழித்திருப்பேன்

சற்றுமுன் கிடைத்த தகவல்படி
தொலைந்துபோனது என் இதயமடி
உயிரே என் உயிரே என் உயிரே உயிரே

உற்று பார்க்கும் விதம் புரிந்ததடி
இளமை சிறகடித்து பறந்ததடி
உயிரே என் உயிரே என் உயிரே உயிரே
நிலை மாறாமல் தலை சாயாமல் அடி உனக்கே வாழ்ந்திருப்பேன்...

லால லால லலா லல லல லல்லா...
லால லால லலா லல லல லல்லா...
லலலா லல லலலா லல லலலா...



Credits
Writer(s): Bharani, Yubabharathi
Lyrics powered by www.musixmatch.com

Link