Brahma Devan

பிரம்மா தேவன் அவன் வண்ணஜாலமென்ன
பாவை மேனி அதில் கொண்ட கோலமென்ன
சுந்தரியே எழில் சுந்தரியே
காதலியே ஆசை காதலியே
தத்தை இவள் பக்கம் வர தழுவிட வெட்கம் உறவா வா வா
வசந்த தேனே அனைத்தேன் உன்னைதானே

காளிதாசன் அவன் மேகதூதமென காதல் தாசன் இவன் ராகம் பாடி வர

என்னவனே கவிதை சொன்னவனே
ஓ...
மன்னவனே மனதில் நின்னவனே
ஓ சிரிப்பில் அமுதம் சிந்தும் குமுதம் உன்னை கேட்கிறேன்
வேடன் கலையால் விரித்தாய் வலையை நானும் தோற்கிறேன்
ஓ. அடை கட்டும் தாமரை நீயே எனக்கு தேவதை
அடை கட்டும் தாமரை நீயே எனக்கு தேவதை
தேவி என்னை புகழ்ந்தால் பூ தூவி வாழ்ந்திருந்தால்
பிரம்மா தேவன் அவன் வண்ணஜாலமென்ன
பாவை மேனி அதில் கொண்ட கோலமென்ன
சுந்தரியே எழில் சுந்தரியே
மன்னவனே மனதில் நின்னவனே
தூண்டில் போட்டான் என்னை கேட்டான் தேகம் சிலிர்க்குதே
கன்னம் வைக்க கன்னம் தேட அன்னம் சிவக்கிறாள்
காதல் கொண்ட இளைஞனை களவாடும் திருடனே
காதல் கொண்ட இளைஞனை களவாடும் திருடனே

மெல்ல இவள் தடுக்க கொள்ளை எங்கு அடிக்க
காளிதாசன் அவன் மேகதூதமென காதல் தாசன் இவன் ராகம் பாடி வர

என்னவனே கவிதை சொன்னவனே
மன்னவனே மனதில் நின்னவனே
தத்தை இவள் பக்கம் வர தழுவிட வெட்கம் உறவா வா வா
எந்தன் தலைவா நான் தான் உந்தன் நிலவா
பிரம்மா தேவன் அவன் வண்ணஜாலமென்ன
பாவை மேனி அதில் கொண்ட கோலமென்ன
சுந்தரியே எழில் சுந்தரியே
காதலியே ஆசை காதலியே
அன்பு கிருஷ்ணா



Credits
Writer(s): T. Rajendar
Lyrics powered by www.musixmatch.com

Link