Adiye Adi Chinnapulla

அடியே அடி சின்னபுள்ள
ஆவி துடிக்குது கண்ணுக்குள்ள
அடியே அடி சின்னபுள்ள
ஆவி துடிக்குது கண்ணுக்குள்ள
மலர்ந்த மலர மறச்சா நல்லால்ல
அடடா அட சின்ன கண்ணா
இன்னிக்கு அது ரெண்டில் ஒண்ணா
தனியா கேட்டா தருவேன் ஒவ்வொன்னா
அடியே அடி சின்னபுள்ள
ஆவி துடிக்குது கண்ணுக்குள்ள

கன்னத்தை மெல்லமாய் தட்டுவேன்
உன் காதிலே தேன் துளி சொட்டுவேன்
உன்னை நான் செல்லமாய் திட்டுவேன்
என் ஊடலை தீர்த்து வை ஒட்டுவேன்
கட்டிலில் ரெண்டு ஜீவன்கள் துடித்தால் என்ன
கடலே உன்னை சூரியன் குடித்தால் என்ன
வாலிபம் கண்டு நீ உருகினாய்
என் வாழ்வடி ஜீவனை பருகினாய்
அடியே அடி சின்னபுள்ள
ஆவி துடிக்குது கண்ணுக்குள்ள
அடியே அடி சின்னபுள்ள
ஆவி துடிக்குது கண்ணுக்குள்ள
மலர்ந்த மலர மறச்சா நல்லால்ல
அடடா அட சின்ன கண்ணா
இன்னிக்கு அது ரெண்டில் ஒண்ணா
தனியா கேட்டா தருவேன் ஒவ்வொன்னா
அடியே அடி சின்னபுள்ள
ஆவி துடிக்குது கண்ணுக்குள்ள

ஆ ஆ ஆ... ஆ ஆ ஆ... ஆ ஆ ஆ ஆ...
கதவினை மெல்லவே மூடினாய்
நீ கஞ்சன் போல் புதையலை தேடினாய்
புதையலை புடவையில் மூடினாய்
நான் பூனை போல் தோண்டினேன் ஓடினாய்
மன்மதா உன் மேகங்கள் பொழிந்தால் என்ன
மழையில் எந்தன் பூமியே நனைந்தால் என்ன
தேவைகள் தினம் தினம் நீளட்டும்
என் தேவதை என்னையும் ஆளட்டும்
அடியே அடி சின்னபுள்ள
ஆவி துடிக்குது கண்ணுக்குள்ள
ஒ ஒ ஒ...
அடியே அடி சின்னபுள்ள
ஆவி துடிக்குது கண்ணுக்குள்ள
மலர்ந்த மலர மறச்சா நல்லால்ல
அடடா அட சின்ன கண்ணா
இன்னிக்கு அது ரெண்டில் ஒண்ணா
தனியா கேட்டா தருவேன் ஒவ்வொன்னா
அடியே அடி சின்னபுள்ள
ஆவி துடிக்குது கண்ணுக்குள்ள



Credits
Writer(s): Vairamuthu, Soundaryan
Lyrics powered by www.musixmatch.com

Link