Manthiram Sonnen

மந்திரம் சொன்னேன் வந்துவிடு
சம்மதம் எங்கே தந்துவிடு

புதிய பாடம் சொல்வேனே
அதன் பொருளைச் சொல்வாய் செந்தேனே
புதிய பாடம் சொல்வேனே அதன் பொருளைச் சொல்வாய் செந்தேனே
பாதம் பார்த்து வேதம் சொல்ல ஆற்றங்கரைக்கு வந்தேனே

மந்திரம் சொன்னேன் வந்துவிடு
சம்மதம் எங்கே தந்துவிடு

கண்மணி உனக்கொண்ணு தெரியுமா அந்த இடுப்பில் இருக்குது என் மனசு
என் மனம் உனக்கென்ன புரியுமா தண்ணிக் குடத்தில் துடிக்குது என்னுயிரு
நீ குளித்தால் நதியில் மணமிருக்கும்
நீ ரசித்தால் கவியின் குணமிருக்கும்

வந்துவிட்டேன் மெல்ல மெல்ல
தந்துவிட்டேன் என்ன சொல்ல
பாவமல்ல வேதங்கள் தடையல்ல

மந்திரம் சொன்னேன் வந்துவிடு
சம்மதம் எங்கே தந்துவிடு

பொருத்தம் நமக்குள் இல்லையென்று நீ நினைத்ததுண்டோ நெஞ்சுக்குள்ள
தாமிரபரணி ஆத்துத் தண்ணி அது ஜாதி பேதம் பார்ப்பதில்ல
நீ நினைத்தால் திருநீரணிந்திருப்பேன்
நீ தடுத்தால் கோயில் மறந்திருப்பேன்

தொட்டதெல்லாம் வெற்றியடி
வெற்றி தந்தாள் அல்லிக் கொடி
கட்டிப் பிடி

காதல் வேதம் கற்பிக்க வா காதில் வந்து ஒப்பிக்க வா
காதல் என்னை அழைக்குது எங்கள் வேதம் என்னைத் தடுக்குது
காதல் பெரிதா வேதம் பெரிதா
காதல்தானே ஜெயிக்குது

மந்திரம் சொன்னேன் வந்துவிட்டாள்
சம்மதம் எல்லாம் தந்துவிட்டாள்

காலம் நேரம் பாராமல் பிறர் கண்கள் ஏதும் காணாமல்
காலம் நேரம் பாராமல் பிறர் கண்கள் ஏதும் காணாமல்
ஆற்று மணலில் பேர்கள் எழுதி அழகு பார்ப்போம்
அன்பே வா அழகு பார்ப்போம்
அன்பே வா அழகு பார்ப்போம் அன்பே வா



Credits
Writer(s): Vairamuthu, Devendran
Lyrics powered by www.musixmatch.com

Link