Adi Poonguyile - From "Aranmanai Kili"

அடி பூங்குயிலே பூங்குயிலே கேளு
நீ பாட்டெடுத்த காரணத்த கூறு
அடி பூங்குயிலே பூங்குயிலே கேளு
நீ பாட்டெடுத்த காரணத்த கூறு
யாரிடத்தில் உன் மனசு போச்சு?
நூல போல உன் உடம்பு ஆச்சு

அடி பூங்குயிலே பூங்குயிலே கேளு
நீ பாட்டெடுத்த காரணத்த கூறு
யாரிடத்தில் உன் மனசு போச்சு?
நூல போல உன் உடம்பு ஆச்சு
வட்டம் இட்டு சுத்தும் கண்ணு வீச்சு
வாய விட்டு போனதென்ன பேச்சு

பூங்குயிலே பூங்குயிலே கேளு
நீ பாட்டெடுத்த காரணத்த கூறு
ஆத்தங்கரை அந்தப்புரம் ஆக்கி கொள்ளவா?
அந்த அக்கரைக்கும் இக்கரைக்கும் கோட்டை கட்டவா?
மாமன் கையில் பூவை தந்து சூடி கொள்ளவா?
அடி ஆசை என்னும் ஊஞ்சல் கட்டி ஆடி கொள்ளவா?

சொல்லு சொல்லு திட்டமென்ன சொல்லுவது கஷ்டமா?
பொத்தி பொத்தி வச்சதென்ன என்னென்னவோ இஷ்டமா?
கூவாம கூவுறியே குக்கூ குக்கூ பாட்டு
மாத்தாம மாத்திபுட்ட சொக்கு பொடி போட்டு
யாரிடத்தில் உன் மனசு போச்சு?
நூல போல உன் உடம்பு ஆச்சு

பூங்குயிலே பூங்குயிலே கேளு
நீ பாட்டெடுத்த காரணத்த கூறு
ஊர எல்லாம் சுத்தி வந்த ஒத்தக்கிளியே
இப்ப ஓரிடத்தில் நின்றதென்ன சொல்லு கிளியே?
சொந்த பந்தம் யாரும் இன்றி வந்த கிளியே
ஒரு சொந்தம் இப்போ வந்ததென்ன வாசல் வழியே

வேரு விட்ட ஆலங்கன்னு வானம் தொட பாக்குது
வானம் தொடும் ஆசையில மெல்ல மெல்ல பூக்குது
பூப்பூவா பூக்க வச்ச மாமன் அவன் யாரு?
பாடுகிற பாட்டுலதான் நீயும் அதை கூறு
யாரிடத்தில் உன் மனசு போச்சு?
நூல போல உன் உடம்பு ஆச்சு

பூங்குயிலே பூங்குயிலே கேளு
நீ பாட்டெடுத்த காரணத்த கூறு
யாரிடத்தில் உன் மனசு போச்சு?
நூல போல உன் உடம்பு ஆச்சு
வட்டம் இட்டு சுத்தும் கண்ணு வீச்சு
வாய விட்டு போனதென்ன பேச்சு

பூங்குயிலே பூங்குயிலே கேளு
நீ பாட்டெடுத்த காரணத்த கூறு



Credits
Writer(s): Ilaiyaraaja, Kasthuri Raja
Lyrics powered by www.musixmatch.com

Link