Unnai Unnai Unnai

உன்னை உன்னை உன்னை
கடலளவு நேசிக்கிறேன்
மலையளவு வெறுக்கிறேன்

உன்னை உன்னை உன்னைத்தவிற வேறெதுவும் இல்லை
இதை உன்னிடம் நான் ஒத்துக்கொள்வதாய் இல்லை
தனிமை தனிமை தனிமை இன்றி வேறெதுவும் இல்லை
இதை உன்னிடம் நான் ஒத்துக்கொள்ள நீ யோக்கியனில்லை

எந்த நேரத்தில் எங்கு நின்றால் நீ வருவாய்
என்று எனக்குத் தெரியும் ஆனால் நிற்பதாய் இல்லை
எந்த சாலையில் எங்கு திரும்பினால் உன் வீடு வரும்
என்று எனக்குத்தெரியும் ஆனால் வருவதாய் இல்லை

நினைத்த நொடியில் நினைத்தபடியே
உன் குரலை என்னால் கேட்கவும் முடியும்
ஆனால் கேட்பதாய் இல்லை

நீ சிரித்து மயக்கும் முகநூல் படங்களுக்கு
என் ஆன்மாவில் இருந்து
அரைவரி எடுத்து எழுதினால் போதும் நீ like செய்வாய்
ஆனால் நான் எழுதுவதாய் இல்லை

உன்னை கடலளவு
நான் நேசிக்கிறேன்
உன்னை மலையளவு
நான் வெறுக்கிறேன்...

பசு தோல் போர்த்திய புலி
நீயா? நானா?



Credits
Writer(s): Muthukumar N, Shankar Raja Yuvan
Lyrics powered by www.musixmatch.com

Link