Narumugaye (From "Iruvar")

நறுமுகையே நறுமுகையே
நீயொரு நாழிகை நில்லாய்
செங்கனி ஊறிய வாய் திறந்து
நீயொரு திருமொழி சொல்லாய்
அற்றைத் திங்கள் அந்நிலவில்
நெற்றிதறள நீர்வடிய கொற்றப்
பொய்கை ஆடியவள் நீயா (2)

திருமகனே திருமகனே
நீ ஒரு நாழிகைப் பாராய்
வெண்ணிறப் புரவியில் வந்தவனே
வேல்விழி மொழிகள் கேளாய்
அற்றைத் திங்கள் அந்நிலவில் கொற்றப்
போய்கை ஆடுகையில்
ஒற்றப்பார்வை பார்த்தவனும் நீயா(2)

மங்கை மான்விழி அம்புக்ள்
என் மார் துளைத்ததென்ன
பாண்டி நாடனைக் கண்டு என்
உடல் பசலை கொண்டதென்ன
நிலாவிலே பார்த்த வண்ணம்
கனாவிலே தோன்றும் இன்னும்
நிலாவிலே பார்த்த வண்ணம்
கனாவிலே தோன்றும் இன்னும்
இளைத்தேன் துடித்தேன் பொறுக்கவில்லை
இடையினில் மேகலை இருக்கவில்லை
(நறுமுகையே.)

ஞாயும் ஞாயும் யாராகியறோ?? நெஞ்சில் நேர்ந்தததென்ன
யானும் நீயும் எவ்வழி அறிதும் உறவு சேர்ந்ததென்ன
ஒரே ஒரு தீண்டல் செய்தாய் உயிர்க்கொடி பூத்ததென்ன (2)

திருமகனே திருமகனே
நீ ஒரு நாழிகைப் பாராய்
வெண்ணிறப் புரவியில் வந்தவனே
வேல்விழி மொழிகள் கேளாய்
அற்றைத் திங்கள் அந்நிலவில் கொற்றப்
பொய்கை ஆடுகையில்
ஒற்றைப் பார்வை பார்த்தவனும் நீயா(2)
அற்றைத் திங்கள் அந்நிலவில்
நெற்றிதறள நீர்வடிய கொற்றப்
பொய்கை ஆடியவள் நீயா (2)



Credits
Writer(s): A R Rahman, Vairamuthu
Lyrics powered by www.musixmatch.com

Link