Adukku Malli Yeduthu - From "Aavaram Poo"

அடுக்கு மல்லி எடுத்து வந்து தொடுத்து வச்சேன் மாலை
மணக்கும் ஒரு மணிக் கழுத்தில் விழுந்ததிந்த வேளை

அச்சாரம் அப்ப தந்த முத்தாரம்
அதை அடகு வைக்காம காத்து வந்தேன் இந்நாளா
தள்ளி விலகி நிக்காம தாளம் தட்டு கண்ணாளா

அடுக்கு மல்லி எடுத்து வந்து தொடுத்து வச்சேன் மாலை
மணக்கும் ஒரு மணிக் கழுத்தில் விழுந்ததிந்த வேளை

வெற்றி மாலை போட்டானய்யா கெட்டிக்கார ராசா
முத்துப் போல கண்டான் அங்கே மொட்டுப் போல ரோசா
சொந்தம் இங்கே வந்தாளுன்னு சொன்னான் அவன் லேசா
காணததக் கண்டா அப்ப ஆனானய்யா பாசா

என்னாச்சு இந்த மனம் பொன்னாச்சு
அட எப்போதோ ரெண்டு மட்டும் ஒண்ணாச்சு
அட வாய்யா மச்சானே யோகம் இப்போ வந்தாச்சு

அடுக்கு மல்லி எடுத்து வந்து தொடுத்து வச்சேன் மாலை
மணக்கும் ஒரு மணிக் கழுத்தில் விழுந்ததிந்த வேளை

மெட்டுப் போடும் செந்தாழம்பூ கெட்டிமேளம் போட
எட்டிப் பாக்கும் ஆவாரம்பூ வெக்கத்தோடு ஓட
அக்கம் பக்கம் சொல்லாமத்தான் உள்ளுக்குள்ளே வாட
சுத்தும் மனம் நில்லாமத்தான் கெட்டானய்யா கூட

சந்தோஷம் தங்கத்துக்கு சந்தோஷம்
இப்போதும் கிட்டவரும் எப்போதும்
அட வாய்யா ராசாவே அய்யா இப்ப ஒன் நேரம்

அடுக்கு மல்லி எடுத்து வந்து தொடுத்து வச்சேன் மாலை
மணக்கும் ஒரு மணிக் கழுத்தில் விழுந்ததிந்த வேளை

அச்சாரம் அப்ப தந்த முத்தாரம்
அதை அடகு வைக்காம காத்து வந்தேன் இந்நாளா
தள்ளி வெலகி நிக்காம தாளம் தட்டு கண்ணாளா

அடுக்கு மல்லி எடுத்து வந்து தொடுத்து வச்சேன் மாலை
மணக்கும் ஒரு மணிக் கழுத்தில் விழுந்ததிந்த வேளை
அடுக்கு மல்லி எடுத்து வந்து தொடுத்து வச்சேன் மாலை
மணக்கும் ஒரு மணிக் கழுத்தில் விழுந்ததிந்த வேளை

Credits
Writer(s): Ilaiyaraja, Pulamaipithan
Lyrics powered by www.musixmatch.com

Link