Rasathi (From "Thiruda Thiruda")

ராசாத்தி என் உசுரு என்னுதில்லை
பூச்சூடி வாக்கப்பட்டு போற புள்ள
நீ போனா என் உடம்பு மண்னுக்குள்ள
ராவோடு சேதி வரும் வாடி புள்ள

காரை வீட்டு திண்ணையில கறிக்கு மஞ்சள் அறைக்கையிலே
மஞ்சளை அறைக்கு முன்னே மனசை அறைச்சவளே
கரிசைக்காட்டு ஓடையிலே கண்டாங்கி தொவைக்கையிலே
துணிய நனையவிட்டு மனச புழிஞ்சிவளே
நல்ல களத்துமேட்டில் என்னை இழுத்து முடிஞ்சிகிட்டு
போறவ போறவ தான் பொத்திகிட்டி போனவ தான்
கல்யாண சேலையில கண்ணீரை தொடச்சிகிட்டு
போறவ போறவ தான் பொஞ்சாதியா போறவ தான்
நான் தந்த மல்லிகைய நட்டாத்தில் போட்டு புட்டு
அரளிப் பூசூடி அழுதபடி போற புள்ள
கடலை காட்டுக்குள்ள கையடிச்சு சொன்ன புள்ள
காத்துல எழுதணும் பொம்பளைங்க சொன்ன சொல்ல

(ராசாத்தி என் உசுரு என்னுதில்லை...)

தொட்டு தொட்டு பொட்டு வெச்ச சுட்டு விரல் காயலையே
மரிக்கொழுந்து வெச்ச கையில் வாசம் இன்னும் போகலையே
மருதையிலே வாங்கி தந்த வளவி ஒடையலையே
மல்லுவேட்டி மத்தியில மஞ்சகறை மாறலையே
அந்த கழுத்து தேமலையும் காதோர மச்சத்தையும் பாப்பதெப்போ
பாப்பதெப்போ பாப்பதெப்போ பெளர்ணமியும் வாரதெப்போ
அந்த கொலுசு மணி சிரிப்பும் கொமரி இளஞ்சிரிப்பும் கேட்பதெப்போ
கேட்பதெப்போ கேட்பதெப்போ கீரத்தண்டும் பூப்பதெப்போ
கருவேளங்காட்டுக்குள்ள கருச்சாங்குருவி ஒன்னும்
சுதி மாறி கத்து தம்மா துணையத்தான் காணோமுன்னு
கடலை காட்டுக்குள்ள கையடிச்சு சொன்ன புள்ள
காத்துல எழுதணும் பொம்பளைங்க சொன்ன சொல்ல

(ராசாத்தி என் உசுரு என்னுதில்லை...)



Credits
Writer(s): A R Rahman, N/a Vairamuthu
Lyrics powered by www.musixmatch.com

Link