Ilamai

நெஞ்சுக்குள்ள உம்ம முடிஞ்சிருக்கேன்

நெஞ்சுக்குள்ள உம்ம முடிஞ்சிருக்கேன்

நெஞ்சுக்குள்ள
உம்ம முடிஞ்சிருக்கேன்
இங்க எத்திசையில்
எம்பொழப்பு விடிஞ்சிருக்கோ
வெள்ளை பார்வை
வீசிவிட்டீர் முன்னாடி
இத தாங்காத மனசு
தண்ணி பட்ட கண்ணாடி

வண்ண மணியாரம்
வலதுகை கெடியாரம்
ஆனை புலியெல்லாம்
அடக்கும் அதிகாரம்

நீர் போன பின்னும்
நிழல் மட்டும் போகலயே போகலயே
நெஞ்சுகுழியில் நிழல் வந்து
விழுந்துருச்சு

அப்ப நிமிந்தவ தான்
அப்பறமா குனியலையே குனியலையே
கொடக்கம்பி போல மனம்
குத்தி நிக்குதே

நெஞ்சுக்குள்ள
உம்ம முடிஞ்சிருக்கேன்

நெஞ்சுக்குள்ள
உம்ம முடிஞ்சிருக்கேன்
இங்க எத்திசையில்
எம்பொழப்பு விடிஞ்சிருக்கோ

பச்சி ஒறங்கிருச்சு
பால் தயிரா தூங்கிருச்சு
இச்சி மரத்து மேல
எல கூட தூங்கிருச்சு

காச நோய்க்காரிகளும்
கண்ணுறங்கும் வேளையில
ஆச நோய் வந்தமக
அரைநிமிசம் தூங்கலைய ஏ ஏ ஏ

நெஞ்சுக்குள்ள
உம்ம முடிஞ்சிருக்கேன்
இங்க எத்திசையில்...

Translate to English



Credits
Writer(s): Arun Muraleedharan, B.k. Harinarayanan
Lyrics powered by www.musixmatch.com

Link