Aasai

ஆசை

ஆசை
அறியும் நேரம் இங்கு
ஆசை
தீராதோ

ஆசை
அறிந்தும் ஓயவில்லை
ஆசை மாறாதோ

தேடி-தேடி காணுவோம்
தேவையாக
ஓடி-ஓடி கூடுவோம்
போதையோ

போகும் பாதை யாவுமே
மோகமாக
ஆகும் நாளை காயமே
மாயமாக

ஆசை
அலையும் ஞானம் இங்கு
ஆசை ஓயாதோ

ஆசை
வலையில் மீளவில்லை
ஆசை பேராசை

ஆதிகால வேதமோ
போதனை நீ தான்
நீதியாக வேகுதே வேதனை

ஆரவார வாழ்விலே
ஆடினோமே
ஆழம் காண தோணுதே
ஆசையோ-ஆசையோ

பாரா நாணயம் இதோ
ஆணை கூறுதோ இதோ
ஆசை தீவுதான் இதோ
நாளை மாளுவோம் யாரோ

வீரம் கூட மாறுமே கோழையாக
தூரமாக ஓடுமே காணலா

மாறி-மாறி எண்ணுவோம் ஆடையாக
போதும்-போதும்-போதுமே
ஆசையே-ஆசையே

ஆசை



Credits
Writer(s): R Muthamil Selvan, Dhibu Ninan Thomas
Lyrics powered by www.musixmatch.com

Link