Oh Kathal Ennai

ஓ காதல் என்னை காதலிக்கவில்லை
ஓ காற்றும் என்னை ஆதரிக்கவில்லை
கன்னி வெண்ணிலா காத்திருக்கிறேன்
உன்னை எண்ணியே பூத்திருக்கிறேன்

தீயில் வேகும் போதும் ஓதிடும் மந்திரம்
ஒன்று தான் ஒன்று தான்
I love you i love you i love you

தேவி வான் சொல்லியா மேகம் வரும்
நீ சொல்லியா காதல் வரும்
தேவா நான் கேட்பது காதல் வரம்
நீ தந்தது கண்ணீர் வரம்

பெண்ணழகு முழுதும் கற்பனை என்று உருகி வழிகிறேன்
என்னழகு உனது அற்பணம் என்று எழுதி விடுகிறேன்
போதும் போதும் புன்னகை என்பது காதலின் பல்லவி
I love you I love you I love you

ஓஹோ என் வானமோ ரெண்டானது நீ சொல்லியே ஒன்றானது
ஓஹோ கள் என்பது பால் ஆனது நான் காணவே நாளானது
என் புடவை உனது கட்டளை கேட்டு இடையை மறந்தது
என் விழிகள் உனது கண்களை கண்டு இமையை மறந்தது

தீயில் வேகும் போதும் ஓதிடும் மந்திரம்
ஒன்று தான் ஒன்று தான்
I love you I love you I love you

ஓ காதல் உன்னை காதலித்ததம்மா
ஓ காற்றும் உன்னை ஆதரித்ததம்மா
கன்னி வெண்ணிலா கையில் வந்தது
கையில் வந்ததும் காதல் வந்தது

தீயில் வேகும் போதும் ஓதிடும் மந்திரம்
ஒன்று தான் ஒன்று தான்
I love you I love you I love you



Credits
Writer(s): Vairamuthu, Hamsalekha
Lyrics powered by www.musixmatch.com

Link