Antha Vanatha

அந்த வானத்த போல மனம் படைச்ச மன்னவனே
பனி துளியை போல குணம் படைச்ச தென்னவனே
மஞ்சளிலே ஒரு நூலெடுத்து
விண்ணுக்கும் மண்ணுக்கும்
சம்பந்தம் உண்டுன்னு
சொன்னது யாரு
அது மன்னவன் பேரு

அந்த வானத்த போல மனம் படைச்ச மன்னவனே
பனி துளியை போல குணம் படைச்ச தென்னவனே
மாறி போன போதும்
இது தேரு போகும் வீதி
வாரி வாரி தூற்றும்
இனி யாரு உனக்கு நாதி

பாசம் வைத்ததாலே
நீ பயிரை காத்த வேலி
பயிரைக் காத்த போதும்
வீண் பழியை சுமந்த நீதி
சாமி வந்து கேட்டிடுமா
வீண் பழியை தீர்த்திடுமா

விண்ணுக்கும் மண்ணுக்கும்
சம்பந்தம் உண்டுன்னு
சொன்னது யாரு
அது மன்னவன் பேரு

அந்த வானத்த போல மனம் படைச்ச மன்னவனே
பனி துளியை போல குணம் படைச்ச தென்னவனே
நெஞ்சம் என்னும் கூடு
அதில் நெருப்பு வைத்ததாரு
துன்பம் வந்த போதும்
அதை துடைப்பதிங்கு யாரு

கலங்கும்போது சேறு
அது தெளியும் போது நீறு
கடவுள் போட்ட கோடு
அதை திருத்த போவதாரு
வெந்த புண்ணும் ஆறிடுமா
வேதனை தான் தீர்ந்திடுமா

விண்ணுக்கும் மண்ணுக்கும்
சம்பந்தம் உண்டுன்னு
சொன்னது யாரு
அது மன்னவன் பேரு

அந்த வானத்த போல மனம் படைச்ச மன்னவனே
பனி துளியை போல குணம் படைச்ச தென்னவனே
மஞ்சளிலே ஒரு நூலெடுத்து
விண்ணுக்கும் மண்ணுக்கும்
சம்பந்தம் உண்டுன்னு
சொன்னது யாரு
அது மன்னவன் பேரு

அந்த வானத்த போல மனம் படைச்ச மன்னவனே
பனி துளியை போல குணம் படைச்ச தென்னவனே



Credits
Writer(s): Ilaiyaraaja, R. V Udayakumar
Lyrics powered by www.musixmatch.com

Link