Neethan En Bhoomi

நீதான் என் பூமி, நீதான் என் வானம்
நீயின்றி என் கால்கள் வேறெங்கு போகும்
நீதான் என் நண்பன், நீதான் என் தெய்வம்
நீயின்றி என் வாழ்க்கை இனி என்ன ஆகும்

எந்தன் வழிகாட்டி நீதான் இங்கே
பாதி வழியோடு போனாய் எங்கே?
தந்தைபோல் ஒரு ஆசான் எங்கே?
நொந்து நூலாகி நின்றேன் இங்கே
இன்று ஆறாரோ ஆறாரோ நான் பாட நீ தூங்கையா

நீதான் என் பூமி, நீதான் என் வானம்
நீயின்றி என் கால்கள் வேறெங்கு போகும்...

நான் கேட்ட எல்லாமே நீ வாங்கி தந்தாய்
இன்று உனை கேட்டேன் உயிரே வா
நான் வெல்லும் போதெல்லாம் நீ இன்பம் கொண்டாய்
இன்று உனை தோற்றேன் உயிரே வா

ஒரு தாய் கோழி போல் என்னை நீ தாங்கி கொண்டாய்
மரணம் ஒரு கழுகாய் உன்னை கொன்றது ஏனோ?
என் துன்பங்கள் எல்லாமே நீ ஏந்தி கொண்டாய்
தனியாய் இன்று தவித்தேன் மனம் உன்னை தேடுதே

நீ தந்த ரத்தத்தில் வெப்பத்தில் இங்கே
சூடாகி கொதிக்கின்றதே
அட நீ போன பின்னாலும் எந்நாளும் உன் பேரை
காப்பாத்தும் என் உள்ளமே

எந்தன் வழிகாட்டி நீதான் இங்கே
பாதி வழியோடு போனாய் எங்கே?
தந்தைபோல் ஒரு ஆசான் எங்கே?
நொந்து நூலாகி நின்றேன் இங்கே
இன்று ஆறாரோ ஆறாரோ நான் பாட நீ தூங்கையா



Credits
Writer(s): Muthukumar N, Niro Pirabakaran
Lyrics powered by www.musixmatch.com

Link