Jilla Vittu

வந்தனமா வந்தனமா எல்லோருக்கும் வந்தனம்
மணம் மணமா சந்தனம்
சந்தனத்த பூசிக்கிட்டு சந்தோசமா கேட்க்கனும்
கலகலப்பா ஆடனும்
கைகள் தாளம் போடனும் விசிலு ராகம் பாடனும்

ஜில்லா விட்டு ஜில்லா வந்த கதைய நீயும் கேளய்யா
தூத்துக்குடி பொண்ணய்யா நான் தூத்துக்குடி பொண்ணய்யா

துாத்துக்குடி பொண்ணய்யா என் கதையை கேளய்யா
சொகத்த விக்கிற பொண்ணுக்கும் மனசிருக்குது பாரய்யா

அஞ்சு பொண்ண பெத்தெடுத்தா அரசன் கூட ஆண்டியாம்
வாழ்க்கையில போண்டியாம்
எட்டாவதா என்ன பெத்த என் அப்பனுக்கு இது தெரியல
சொக்கனும் அதை சொல்லல
அஞ்சு பொண்ண பெத்தெடுத்தா அரசன் கூட ஆண்டியாம்
வாழ்க்கையில போண்டியாம்
எட்டாவதா என்ன பெத்த என் அப்பனுக்கு இது தெரியல
சொக்கனும் அதை சொல்லல, சொக்கனும் அதை சொல்லல

வளர்ந்து நிக்கிற தென்னையா வக்கனையா நான் நின்னேன்
வக்கனையா நான் நின்னேன்
ஏழையும் கரை சேர்ந்ததால ஏழரையாய் நான் ஆனேன்
ஏழரையாய் நான் ஆனேன்

அங்க சுத்தி இங்க சுத்தி வந்தானய்யா மாப்பிள்ளை
சீக்காலிக்கு மறுப்புள்ள
வலையப் போல என்னக்கட்டி போனானய்யா மாப்பிள்ளை
துப்பில்லாத ஆம்பள அவன் துப்பில்லாத ஆம்பள

அஞ்சான் நாளு மூட்டுவலியில் மாப்புள்ளதான் படுத்துட்டான்
என் உசுர எடுத்துட்டான்
ஒன்னு போனா ஒன்னு வந்து வருஷமெல்லாம் தேஞ்சுட்டான்
கனவ எல்லாம் ஒடைச்சிட்டான் என் கனவ எல்லாம் ஒடைசிட்டான்

காய்ச்சலுக்கு காடு வித்தேன் இருமலுக்கு நெலம் வித்தேன்
வித்ததெல்லாம் போக அட எச்சமாக நான் நின்னேன்
மிச்சமாக நான் நின்னேன், அட மிச்சமாக நான் நின்னேன்

ஊரிலுள்ள மீசையெல்லாம் என்னை சுத்தி வந்துச்சு
இளம் மனச கெடுத்துச்சு
உசுர விட மானம் பெருசு புத்திக்குத்தான் தெரிஞ்சுச்சு
வயிறு எங்கே கேட்டுச்சு

ஒரு சானு வயிதுக்குதான் எல்லாத்தையும் விக்கிறேன்
நான் எல்லாத்தையும் விக்கிறேன்
இப்ப இங்கே நிக்கிறேன் என் கதைய முடிக்கிறேன்

ஜில்லா விட்டு ஜில்லா வந்த கதைய நீ கேட்டியா
என் கதைய நீ கேட்டியா
ஜில்லா விட்டு ஜில்லா வந்த கதைய நீ கேட்டியா
என் கதைய கேட்டியா

கைகள் தாளம் போடய்யா, விசிலு ராகம் பாடய்யா

விசிலு ராகம் பாடய்யா, விசிலு ராகம் பாடய்யா

Credits
Writer(s): James Vasanthan, Na Muthukumar
Lyrics powered by www.musixmatch.com

Link