Thiloththama

ஓரு முறை எந்தன் நெஞ்சில்
காதை வைத்து கேளடியோ
திலோத்தமா
இருதயம் உந்தன் பேரை சொல்லும்
சொல்லும் பாரடியோ
திலோத்தமா

ஆயிரம் கனவுகள் அம்மம்மா
தந்தவள் நீயம்மா
கனவினில் ஒன்று குறைந்தாலும்
களைபவன் நானம்மா
இதயம் இப்போது கண்ணில் துடிக்குதே
என்ன என்ன என்ன என்ன என்ன என்ன
கண்கள் மூடாமல் கனவு தோன்றுதே
என்ன

இரவு இப்போது நீளம் ஆனதே
என்ன என்ன என்ன என்ன என்ன என்ன
ஜன்னலில் நிலவு சண்டை போடுதே
என்ன

எதிலும் உந்தன் பிம்பம் தோன்றுதே
என்ன என்ன என்ன என்ன என்ன என்ன
என் பேர் இப்போது மறந்து போனதே
என்ன

வானம் இப்போது பக்கம் வந்ததே
என்ன என்ன என்ன என்ன என்ன என்ன
தூக்கம் உன்னாலே தூரம் ஆனதே
என்ன

ஓஹோ ஒரு கடலினிலே நதி கலந்த பின்னே
அது பிரிவதில்லை
ஓஹோ ஒரு கவிதையிலே வந்து கலந்த பின்னே
சொல்லும் அறிவதில்லை

ஒரு முறை எந்தன் நெஞ்சில்
காதை வைத்து கேளடியோ
திலோத்தமா
இருதயம் உந்தன் பேரை சொல்லும்
சொல்லும் பாரடியோ
திலோத்தமா
காற்றே இல்லாமல் வாழ்க்கை என்பதே
இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை
காதல் கொள்ளாத ஜீவன் பூமியில்
இல்லை

கண்கள் இல்லாமல் காட்சி என்பதே
இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை
கனவே இல்லாமல் நிலவு என்பதே
இல்லை

தண்ணீர் இல்லாமல் எந்த மீனும்
இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை
தலைவி இல்லாமல் காதல் காவியம்
இல்லை

மண்ணை தொடாத மழையும் வானிலே
இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை
உன்னைத் தொடாமல் உறவு என்பதும்
இல்லை

ஓஹோ இந்த இயற்கையெல்லம்
நம் இருவரையும் கண்டு மலைத்ததென்ன
ஓஹோ இது காதலுக்கே உள்ள ஜீவ குணம்
இதில் கலக்கமென்ன

ஒரு முறை எந்தன் நெஞ்சில்
காதை வைத்து கேளடியோ
திலோத்தமா
இருதயம் உந்தன் பேரை சொல்லும்
சொல்லும் பாரடியோ
திலோத்தமா

ஆயிரம் கனவுகள் அம்மம்மா
தந்தவள் நீயம்மா
கனவினில் ஒன்று குறைந்தாலும்
களைபவன் நானம்மா



Credits
Writer(s): Deva, Vairamuthu Ramasamy Thevar
Lyrics powered by www.musixmatch.com

Link