Usuraiya Tholaichaen

அட உசுரையா தொலைச்சேன் உனக்குள்ள
இந்த உலகினில் உனைபோல் யாரும் இல்ல
ஆசைய விதச்சன் உனக்குள்ள
உன்னை போல் ஒருத்தன பார்த்ததில்ல

அழகாலே உன் அழகாலே
கரைந்தேனே மெல்ல தொலைந்தேனே
உன்னாலே இனி உன்னாலே
விடியும் என் நாள் முடியாதே

நம் காதல் சொல்ல
மொழி தேவை இல்ல
என் ஜீவன் என்றும் நீதானே...
ஓர் பார்வையாள
என சாச்சிட்டானே
விழி மூடவில்ல உன்னால...

எந்தன் தேடல் உனை சேரும்
உந்தன் பெயரை உயிர் சொல்லும்
இமை மூடும் தருணங்களில்
உனை அருகினில் உணருகின்றேன்

இரவுக்கு நிலவாக நீ தோன்றினாய்
தரை இறங்காமல் தள்ளி நின்று
வதம் செய்கின்றாய்
நான் போகும் வழியெல்லாம் ஒலி வீசினாய்
என் உலகெங்கும் அழகாக நிறம் பூசினாய்

உன்னாலே உயிர்த்தேனே
உயிர் காதல் உணர்ந்தேன் பெண்ணே...

நம் காதல் சொல்ல
மொழி தேவை இல்ல
என் ஜீவன் என்றும் நீதானே...
ஓர் பார்வையாள
என சாச்சிட்டாள
விழி மூடவில்ல உன்னால...

இணை பிரியா வரம்கேட்பேன்
உனை பிரிந்தால் உயிர் துறப்பேன்
விரல் பட்டு பூ வாசம் பொய்யாகுமா
உன் இதழ் பட்டால் என் சுவாசம் மெய்யாகுமா

நீ தூங்கும் நேரம் உன் கன்னம் ஓரம்
உனை தீண்டும் என் தாபம்
உடைந்தே போகும்
என் இதயத்தில் யுத்தம் செய்யாதே...

அட உசுரையா தொலைச்சேன் உனக்குள்ள
இந்த உலகினில் உனைபோல் யாரும் இல்ல
ஆசைய விதச்சன் உனக்குள்ள
உன்னை போல் ஒருத்தன பார்த்ததில்ல

அழகாலே உன் அழகாலே
கரைந்தேனே மெல்ல தொலைந்தேனே
உன்னாலே இனி உன்னாலே
விடியும் என் நாள் முடியாதே

நம் காதல் சொல்ல
மொழி தேவை இல்ல
என் ஜீவன் என்றும் நீதானே...
ஓர் பார்வையாள
என சாச்சிட்டானே
விழி மூடவில்ல உன்னாலே...



Credits
Writer(s): 0
Lyrics powered by www.musixmatch.com

Link