Oru Iniya Manathu

ஒரு இனிய மனது இசையை அனைத்துச் செல்லும்
இன்பம் புது வெள்ளம்
அந்த சுகம் இன்பசுகம்,அந்த மனம் எந்தன் வசம்

ஒரு இனிய மனது இசையை அனைத்துச் செல்லும்
இன்பம் புது வெள்ளம்

ஜீவமானது இசை நாதமென்பது... முடிவில்லாதது
வாழும் நாளெல்லாம் என்னை வாழ வைப்பது,இசை என்றானது
ஆஹா... எண்ணத்தின் ராகத்தின் மின்சாரங்கள்
என் உள்ள மௌனத்தின் சங்கமங்கள்...
இணைந்தோடுது... இசை பாடுது...

ஒரு இனிய மனது இசையை அனைத்துச் செல்லும்
இன்பம் புது வெள்ளம்

மீட்டும் எண்ணமே... சுவையூட்டும் வண்ணமே... மலர்ந்த கோலமே
ராக பாவமே அதில் சேர்ந்த தாளமே மனதின் பாவமே
ஆஹா... பருவ வயதின் கனவிலே பறந்து திரியும் மனங்களே
கவி பாடுங்கள் உறவாடுங்கள்

ஒரு இனிய மனது இசையை அனைத்துச் செல்லும்
இன்பம் புது வெள்ளம்
அந்த சுகம் இன்ப சுகம்,அந்த மனம் எந்தன் வசம்

ஒரு இனிய மனது இசையை அனைத்துச் செல்லும்
இன்பம் புது வெள்ளம்



Credits
Writer(s): Ilaiyaraaja
Lyrics powered by www.musixmatch.com

Link