Yaathreega - The Journey Begins

யாத்ரிகா நீ போய் வா மகனே
உலகமே உந்தன் தாய் வீடுதான்
யாத்ரிகா நீ மண்ணின் மகனே
தெரிவது உன் தாய் நாடு தான்
எவ்விடம் போனாலும்
அவ்விடம் நீ பார்க்கும் வானத்தின்
கூரை யாவும் ஒன்றுதானடா
மரம் செடி கொடி இலை மலை
யாவும் உனதடா
மனிதர்கள் துணை உண்டு
உந்தன் வாழ்க்கை முழுதும்
இனி வரும் தினமது
உந்தன் வாழ்வின் வரமடா
புது இடம் பரிவுடன்
உன்னை தோளில் தாங்கும்
பாதை இல்லாமலே
பயணம் இல்லை
உந்தன் கால் போகும் வழியாவும்
நீ செல்லடா
பயணம் இல்லாமலே
வாழ்க்கை இல்லை இங்கு
யாத்ரீகன் நாம் தானடா



Credits
Writer(s): Kumaran N Muthu, R.h. Vikram
Lyrics powered by www.musixmatch.com

Link