Dhoorathili Naan Kanda - Version 1

தூரத்தில் நான் கண்ட உன் முகம்
நதி தீரத்தில் தேன் கொண்ட என் மனம்

தூரத்தில் நான் கண்ட உன் முகம்
நதி தீரத்தில் தேன் கொண்ட என் மனம்

சுகம் நூறாகும் காவியமே
ஒரு சோகத்தின் ஆரம்பமே
இது உன்னை எண்ணி பாடும் ராகம்

தூரத்தில் நான் கண்ட உன் முகம்
நதி தீரத்தில் தேன் கொண்ட என் மனம்

வேங்குழல் நாதமும் கீதமும்
வேங்குழல் நாதமும் கீதமும்
மையலின் ஏக்கமும் தாபமும்
மாயன் உனது லீலை இதுவே
ஐய்யன் உன் தஞ்சம் என் நெஞ்சமே
தினம் அழைத்தேன் ப்ரபு உன்னையே
ஆடும் காற்றிலே புது ராகம் தோன்றுமா

தூரத்தில் நான் கண்ட உன் முகம்
நதி தீரத்தில் தேன் கொண்ட என் மனம்

காதல் எனும் கீதம் பாடி
உருகும் ஒரு பேதையான மீரா
மீரா மீரா மீரா மீரா

வேலை வரும் போது வந்து
காக்கும் கரம் காக்கும் என்று
வீணை மீட்டும் தேவி உள்ளமே
தீராத ஆசையோடு வாடாத பூக்களோடு
காலை மாலை பூஜை செய்தும் கேட்கவில்லையா

கனவு போல வாழ்வில் எந்தன்
கவலை யாவும் மாற வேண்டும்
கனவு போல வாழ்வில் எந்தன்
கவலை யாவும் மாற வேண்டும்
இரக்கமும் கருணையும் உனக்கில்லையோ

நாளும் எனை ஆளும்
துணை நீயே என வாழ்ந்தேன்
மறவேன் மறவேன் மறவேன்
உன் நினைவுகள் என்னிடம் தினம்
உறவின் பெருமை மறவேன்
வரும் விழி தரும் அதில்
உறவுகள் தெரிவதும் ஒரு சுகம்

வானமும் மேகமும் போலவே
வானமும் மேகமும் போலவே
நீந்திய காலங்கள் ஆயிரம்
மேகம் மறைந்த வானின் தனிமை
இன்று நான் கண்டதும் உண்மையே
தினம் அழைத்தேன் ப்ரபு உனையே
ஆடும் காற்றிலே புது ராகம் தோன்றுமா

தூரத்தில் நான் கண்ட உன் முகம்
நதி தீரத்தில் தேன் கொண்ட என் மனம்



Credits
Writer(s): P Arunachalam, Ilaiyaraaja
Lyrics powered by www.musixmatch.com

Link