Muzhumadhi

முழுமதி முழுமதி நிலவைக் கேளடி
முழுவதும் முழுவதும் உண்மை தானடி
காதலில் கரைந்தவர் என் போல் யாரடி ஹோ

எத்தனை எத்தனை காதல் பார்த்தது
எத்தனை எத்தனை கனவைக் கேட்டது
என் போல் யாருமே இல்லை என்றது கேள் ஹோ

நிலவுக்கு நிலவுக்கு இன்றே தெரிந்தது
உயிருக்கு உயிருக்கு இன்றே புரிந்தது
கனவுக்கு கனவுக்கு சிறகுகள் முளைக்குது
நிலவினை உரசிட நினைவுகள் பறக்குது

முழுமதி முழுமதி நிலவைக் கேளடி
முழுவதும் முழுவதும் உண்மை தானடி
காதலில் கரைந்தவர் என் போல் யாரடி ஹோ

காவியக் காதல் ஆயிரம் கதைகள்
பூமிக்கு சொன்னதடி
நினைவுகளோடு வாழ்வது எந்தன்
காதல் சொல்லுமடி

உலகத்தில் சிறந்த இடம் அதை தேடி
உந்தன் இதயம் வந்தேனே வந்தேனே
உன் விரல் கோர்க்கும் நிமிடத்தில் எந்தன்
தனிமைக்கு தனிமை தந்தேனே தந்தேனே

முழுமதி முழுமதி நிலவைக் கேளடி
முழுவதும் முழுவதும் உண்மை தானடி
காதலில் கரைந்தவர் என் போல் யாரடி ஹோ

நதியின் காதலை கரையிடம் வந்து
அலைகள் சொன்னதடி
மறுபடி மறுபடி அலையிடம் அதனை
கரைகள் கேட்குதடி

நதியினில் நீந்தும் நிலமிதை பார்த்து
வெளிச்சத்தை அள்ளிச் சிந்தாதோ சிந்தாதோ
காலையில் நமது காதலை ஏந்தி
வானத்தை பிரிந்து செல்லாதோ செல்லாதோ

முழுமதி முழுமதி நிலவைக் கேளடி
முழுவதும் முழுவதும் உண்மை தானடி
காதலில் கரைந்தவன் என் போல் யாரடி ஹோ

நிலவுக்கு நிலவுக்கு இன்றே தெரிந்தது
உயிருக்கு உயிருக்கு இன்றே புரிந்தது
கனவுக்கு கனவுக்கு சிறகுகள் முளைக்குது
நிலவினை உரசிட நினைவுகள் பறக்குது

முழுமதி முழுமதி நிலவும் சொன்னது
முழுவதும் முழுவதும் உண்மை தானது
உன் போல் யாரும் இல்லை என்றது



Credits
Writer(s): Na Muthukumar, Satish Chakravarthy
Lyrics powered by www.musixmatch.com

Link