Kavidhai Iravu

கவிதை இரவு, இரவு கவிதை
எது நீ எது நான், என தெரியவில்லை
நிலவின் கனவு, கனவில் நிலவு
எது நீ, எது நான், என புரியவில்லை

கவிதை இரவு, இரவுக் கவிதை
எது நீ எது நான், என தெரியவில்லை
நிலவின் கனவு, கனவில் நிலவு
எது நீ, எது நான், என புரியவில்லை

ஏன் இன்று, ஏன் இன்று, என் உதடுகள் என் மனம் உளறியது
ஏன் இன்று, ஏன் இன்று, உன் அழகுகள் இக்கணம் பதறியது

கவிதை இரவு, இரவுக் கவிதை
எது நீ எது நான், என தெரியவில்லை
நிலவின் கனவு, கனவில் நிலவு
எது நீ, எது நான், என புரியவில்லை

நீ, செல்ல மிருகம், நல்ல நரகம்
நடுவில் நான் யாரோ
நான், பிள்ளை பருவம், இன்ப வடிவம்
இடையில் நீ வேரோ

நீ, நெஞ்சின் நடுவே, உந்தன் உயிரை
உழுது நட வேண்டும்
நீ, மெத்தை முழுதும், உந்தன் அழகை
உதறிவிட வேண்டும்

சில நேரம் மார்கழி ஆகிறாய், சில நேரம் தீக்குழி ஆகிறாய்
எதுவாக நான் ஆன போதிலும், என் நீ, நீ, நீ, நீ நீந்துகிறாய்

நிலவின் கனவு, கனவில் நிலவு
எது நீ, எது நான், என புரியவில்லை

நீ, ரெண்டு விழியால், சண்டை இடலாம்
எதுவும் தவறில்லை
நான், பத்து விரலால், முத்தமிடலாம்
அதுவும் தவறில்லை
நான், பள்ளியறையில், தொல்லை தரலாம்
அதிலும் தவறில்லை

நீ, என்னை முழுதும், தின்று விடலாம்
இதிலும் தவறில்லை
ஹே, உனதாசை யாவையும் பேசிட
ஒரு கோடி ஆயுளும் கூடுமே
விடிகாலை தாவணி வானது
அது நீ, நீ, நீ, நீ ஆகிடுமே

கவிதை இரவு, இரவு கவிதை
எது நீ எது நான், என தெரியவில்லை
நிலவின் கனவு, கனவில் நிலவு
எது நீ, எது நான், என புரியவில்லை

ஏன் இன்று, ஏன் இன்று, என் உதடுகள் என் மனம் உளறியது
ஏன் இன்று, ஏன் இன்று, உன் அழகுகள் இக்கணம் பதறியது



Credits
Writer(s): Vidya Sagar, Yugabharathi
Lyrics powered by www.musixmatch.com

Link