Kodi Kodiyaai

கோடி கோடியாய் குவித்து வைத்தாலும்
நாளைய விடியல் நம் கைகளில்
இல்ல தம்பி இல்லவே இல்லத் தம்பி

கொஞ்சமாவது கொடுத்து உதவினால்
கொள்கையோடு மண்ணில் வாழ பழகினால்
இன்பம் தம்பி உண்மையில் இன்பம் தம்பி

வேலியை போட்டு நிலத்தை வளைக்கிறோம்
வீதியை காட்டி ஊரை சுருக்குறோம்
மரங்களை வெட்டி மழையைக் குறைக்கிறோம்
மனுஷன மனுஷன் புதைக்க நினைக்கிறோம்
வேலியை போட்டு நிலத்தை வளைக்கிறோம்
வீதியை காட்டி ஊரை சுருக்குறோம்
மரங்களை வெட்டி மழையைக் குறைக்கிறோம்
மனுஷன மனுஷன் புதைக்க நினைக்கிறோம்

கொஞ்சமாவது கொடுத்து உதவினால்
கொள்கையோடு மண்ணில் வாழ பழகினால்
இன்பம் தம்பி உண்மையில் இன்பம் தம்பி

பறவைகள் பாட்டை ரசிக்க மறுக்கிறோம்
பாயும் நதிகளின் திசைகள் மறைக்கிறோம்
இயற்கையை வென்றே வாழ நினைக்கிறோம்
இழப்புகள் வந்தால் என்றும் சபிக்கிறோம்
பறவைகள் பாட்டை ரசிக்க மறுக்கிறோம்
பாயும் நதிகளின் திசைகள் மறைக்கிறோம்
இயற்கையை வென்றே வாழ நினைக்கிறோம்
இழப்புகள் வந்தால் என்றும் சபிக்கிறோம்

கொஞ்சமாவது கொடுத்து உதவினால்
கொள்கையோடு மண்ணில் வாழ பழகினால்
இன்பம் தம்பி உண்மையில் இன்பம் தம்பி

தேயும் நிலவுடன் வாடும் மலர்களும்
தினமும் நமக்கு பாடம் சொல்லுமே
கரையும் இரவிலும் உதிரும் பொழுதிலும்
கண்களின் ஈரம் துடைக்க வைக்குமே
தேயும் நிலவுடன் வாடும் மலர்களும்
தினமும் நமக்கு பாடம் சொல்லுமே
கரையும் இரவிலும் உதிரும் பொழுதிலும்
கண்களின் ஈரம் துடைக்க வைக்குமே

கோடி கோடியாய் குவித்து வைத்தாலும்
நாளைய விடியல் நம் கைகளில்
இல்ல தம்பி இல்லவே இல்லத் தம்பி (இல்லத் தம்பி)

கொஞ்சமாவது (இல்லவே இல்ல)
கொடுத்து உதவினால் (இல்லத் தம்பி)
கொள்கையோடு மண்ணில் வாழ பழகினால்
இன்பம் தம்பி உண்மையில் இன்பம் தம்பி



Credits
Writer(s): Karmegam Nanda, V Kishorekumar, K R Gurubath
Lyrics powered by www.musixmatch.com

Link