Karuva Karuva Payale

கருவா கருவா பயலே
என கேட்காம தொட வாயா
சூட்ட ஏத்தாம

வரவா வரவா புயலே
உன்ன தாக்காம விடமாட்டேன்
ஆட்டம் பார்க்காம

என்ன வேண்ணா என்ன நீ செஞ்சிக்கோயா
நிதம் பூக்குறேன் தாமரையா

இப்போ பாரு உன்ன நானும்
முட்டப்போறேன்
அடி ஆத்தி நீ தாங்குவியா
நெருப்பா... என ஆக்குறியே செவப்பா

கருவா கருவா பயலே
என கேட்காம தொட வாயா
சூட்ட ஏத்தாம

ஓ வரவா வரவா புயலே
உன்ன தாக்காம விடமாட்டேன்
ஆட்டம் பார்க்காம

வெளஞ்ச காட்ட வெறிக்கும் மாட்ட
விரட்ட நெனெச்சா பாயும் உன்மேல

கொதிக்கும் சூட்ட நெதைக்கும் ஆத்த
துணிஞ்சி வருவேன் ஆட்டாத வால

விஷ காத்தா
மோதாத மூச்சோட
வெறி ஏற வாரேனே கூத்தாட
வெட கோழி ருசி ஏத்தி
விருந்து போடேண்டி நா சாப்பிட

கருவா கருவா பயலே
என கேட்காம தொட வாயா
சூட்ட ஏத்தாம

அடுக்கு பாண முறுக்கு போல
எனையும் நொறுக்க நேரம் பாக்காத

அலுப்பு தீர அணைக்க போறேன்
ஒடம்பு வலிச்சா ஊர கூட்டாத

கருப்பா வா பேசாத வாய்யால
அடி போடி பாப்பேண்டி ஊடால

பொலிகாளை உனை நானே
அடக்க போறேனே மாராப்புல

கருவா கருவா பயலே
என கேட்காம தொட வாயா
சூட்ட ஏத்தாம
ஓ வரவா வரவா புயலே
உன்ன தாக்காம விடமாட்டேன்
ஆட்டம் பார்க்காம

என்ன வேண்ணா என்ன நீ செஞ்சிக்கோயா
நிதம் பூக்குறேன் தாமரையா

இப்போ பாரு உன்ன நானும்
முட்டப்போறேன்
அடி ஆத்தி நீ தாங்குவியா

நெருப்பா ...
என ஆக்குறியே செவப்பா



Credits
Writer(s): Yugabharathi, D. Imman
Lyrics powered by www.musixmatch.com

Link