Vel Vizhikkari

வேல் விழிக்காரி பெரிய பாளையக்காரி
தீச்சட்டி ஏந்தும் நெற்றி குங்குமக்காரி
வேல் விழிக்காரி பெரிய பாளையக்காரி
தீச்சட்டி ஏந்தும் நெற்றி குங்குமக்காரி

வேப்பிலை மஞ்சள் விபூதி உனது மருந்தம்மா
வேதனை தீர்க்க நீல முத்துவே நீ இறங்கம்மா
வேப்பிலை மஞ்சள் விபூதி உனது மருந்தம்மா
வேதனை தீர்க்க நீல முத்துவே நீ இறங்கம்மா

வேல் விழிக்காரி பெரிய பாளையக்காரி
தீச்சட்டி ஏந்தும் நெற்றி குங்குமக்காரி

சந்தன அபிஷேகத்தால் வாழ்க்கை மணக்கும்
இளநீர் அபிஷேகமோ இனிமை சேர்க்கும்
சந்தன அபிஷேகத்தால் வாழ்க்கை மணக்கும்
இளநீர் அபிஷேகமோ இனிமை சேர்க்கும்

பன்னீர் அபிஷேகம் சாந்தத்தை கொடுக்கும்
பன்னீர் அபிஷேகம் சாந்தத்தை கொடுக்கும்
பால் அபிஷேகமோ கோபத்தை தணிக்கும்
பால் அபிஷேகமோ கோபத்தை தணிக்கும்

வேல் விழிக்காரி பெரிய பாளையக்காரி
தீச்சட்டி ஏந்தும் நெற்றி குங்குமக்காரி

(வீர மாயே)
(ஆத்தா)
(தாயே)
(அம்மா)
(உ-உ)

ஆலயமணி ஓசை வாசலில் ஒலிக்கும்
கால் சலங்கை ஓசையோ மேனி சிலிர்க்கும்
ஆலயமணி ஓசை வாசலில் ஒலிக்கும்
கால் சலங்கை ஓசையோ மேனி சிலிர்க்கும்

அடி எடுத்து ஆத்தா நீ நடந்து வந்தால்
அடி எடுத்து ஆத்தா நீ நடந்து வந்தால்
அண்டம் எல்லாம் பணிந்து நின்று தலை வணங்கும்
அண்டம் எல்லாம் பணிந்து நின்று தலை வணங்கும்

வேல் விழிக்காரி பெரிய பாளையக்காரி
தீச்சட்டி ஏந்தும் நெற்றி குங்குமக்காரி
வேல் விழிக்காரி பெரிய பாளையக்காரி
தீச்சட்டி ஏந்தும் நெற்றி குங்குமக்காரி

வேப்பிலை மஞ்சள் விபூதி உனது மருந்தம்மா
வேதனை தீர்க்க நீல முத்துவே நீ இறங்கம்மா
வேப்பிலை மஞ்சள் விபூதி உனது மருந்தம்மா
வேதனை தீர்க்க நீல முத்துவே நீ இறங்கம்மா

வேல் விழிக்காரி பெரிய பாளையக்காரி
தீச்சட்டி ஏந்தும் நெற்றி குங்குமக்காரி



Credits
Writer(s): Deena, V. Bharath
Lyrics powered by www.musixmatch.com

Link