Poomugam Vaadiyathe

ஏனுங்க-ஏனுங்கோ
பூமுகம் வாடிய தேனுங்க
பொறுமையும் போனது எங்கெங்க
வந்ததும் போவது சரியாங்க
பொன்மகள் சொல்வதை கேளுங்க

உண்ண மறந்து உறங்க மறந்து ஊரில சுற்றியே வர்றீங்க
மனசு விட்டுத்தான் பேசிடலாங்க
மகிழ்ச்சியாக இருப்போங்க
வானத்தில் மேகம் பாருங்க
வானத்தில் மேகம் பாருங்க
வாடிடும் பூங்கொடி நானுங்க

பூமுகம் வாடிய தேனுங்க
பொறுமையும் போனது எங்கெங்க
வந்ததும் போவது சரியாங்க
பொன்மகள் சொல்வதை கேளுங்க

எப்படி துறை போல் இருந்தவர் நீங்க இளைச்சு போனீங்க
குறும்பு பேச்சும் புன்னகை முகமும் மறைஞ்சு போச்சுங்க
பண்டிகை நாளில் வீட்டில் இல்லாமல்
பயணம் எங்கே போறீங்க

வேலை வேலைன்னு மனைவியின் மீது
வெறுப்பாய் ஏனோ இருக்கீங்க
பொண்ணு கொடி போல் வளருறாங்க
பொறுப்பா கொஞ்சம் புரிஞ்சிக்கங்க
பணத்தால் எதுவும் நடக்காதுங்க
பாசத்தின் அருமைய உணர்ந்திடுங்க
சகுண தடையை பாருங்க பூனை குறுக்கே வருதுங்க

பூமுகம் வாடிய தேனுங்க
பொறுமையும் போனது எங்கெங்க
வந்ததும் போவது சரியாங்க
பொன்மகள் சொல்வதை கேளுங்க

எல்லாம் தெரிஞ்ச நல்லவர் நீங்க ஏனோ இப்படி செய்றீங்க
கோயில் cinema hotel போயி ரொம்ப நாளாச்சு
எப்போதாவது விருந்தாளி போல் வருவதும் சரியாங்க
இப்படி வாழ்ந்தா ஊரும் உலகும் எப்படி நம்மை மதிக்குங்க

அர்த்தமே இல்லா வாழ்க்கைக்கு காரணம் யாருன்னு கூறுங்க
யோசனை செய்தே பாருங்க வீணான கோபம் வேண்டாங்க
வீட்டுக்காரியாய் சொன்னேங்க, வீட்டுக்காரியாய் சொன்னேங்க
விவரத்தை புரிஞ்சி நடந்துக்குங்க

பூமுகம் வாடிய தேனுங்க
பொறுமையும் போனது எங்கெங்க
வந்ததும் போவது சரியாங்க
பொன்மகள் சொல்வதை கேளுங்க



Credits
Writer(s): Ponnadiyan, Madapeddi Suresh
Lyrics powered by www.musixmatch.com

Link