Pon Vanil Meenuranga

பொன் வானில் மீன் உறங்க
பூந்தோப்பில் தேன் உறங்க
அன்பே உன் ஞாபகத்தில்
எங்கே போய் நான் உறங்க
கண்ணோடு தூக்கம் ஏது நீ இல்லையேல்
கண்ணீரில் நீந்துகின்றேன் தேன் முல்லையே
புது தேன் முல்லையே

புயல் காற்றில் மரங்கள் சாயும்
மலை சாயுமா
பூவே நம் காதல் மண்ணில் சாயாதம்மா
வெய்யில் நாளில் நதிகள் காயும்
கடல் காயுமா
வாழ்வே நம் காதல் வெள்ளம் காயாதம்மா

என் ஜீவனே ஓ ஓ என் ஜீவனே
கார்கால மின்னல்கள் இடியோடு வந்தாலும்
நீள் வானம் இரண்டாகுமா
கீழ்வர்க்கம் மேல்வர்க்கம் என்கின்ற பேதங்கள்
நேசத்தை துண்டாடுமா

உனக்காகவே உயிர் வாழ்கிறேன்
விடும் மூச்சும் உனக்காக
இல்லை வாழ்க்கை எதற்காக

பொன் வானில் மீன் உறங்க

உனைத் தேடி வருவேன்
கண்ணே நடுராத்திரி
நீயின்றி நாளும் இங்கு சிவராத்திரி
நடந்தாச்சு நிலவைத் தேடி
பல ராத்திரி
நான் காண வேண்டும் உன்னால் நவராத்திரி

நீ காத்திரு ஓ ஓ எதிர்ப்பார்த்திரு
அன்பே என் பாட்டுக்கு அன்றாடம்
உன் பார்வை ஆதார சுதியல்லவா
பொன்னே உன் தோள் சேர முடியாமல்
தடை போடும் பொல்லாத விதியல்லவா

அதை மாற்றுவேன் உனைத் தேற்றுவேன்
அடி ஊரார் தடுத்தாலும் உயிர்க் காதல் அரங்கேறும்

பொன் வானில் மீன் உறங்க
பூந்தோப்பில் தேன் உறங்க
அன்பே உன் ஞாபகத்தில்
எங்கே போய் நான் உறங்க
கண்ணோடு தூக்கம் ஏது நீ இல்லையேல்
கண்ணீரில் நீந்துகின்றேன் தேன் முல்லையே
புது தேன் முல்லையே



Credits
Writer(s): Valee, Deva
Lyrics powered by www.musixmatch.com

Link