Pesa Koodathu

பேசக் கூடாது
வெறும் பேச்சில் சுகம் ஹோய்
ஏதும் இல்லை பேதம் இல்லை
லீலைகள் காண்போமே

ஆசை கூடாது
மணமாலை தந்து ஹோய்
சொந்தம் கொண்டு மஞ்சம் கண்டு
லீலைகள் காண்போமே

ஆசைக் கூடாது

பார்க்கும் பார்வை நீ என் வாழ்வும் நீ
என் கவிதை நீ
பாடும் ராகம் நீ என் நாதம் நீ
என் உயிரும் நீ
காலம் யாவும் நான் உன் சொந்தம்
காக்கும் தெய்வம் நீ
இடையோடு கனி ஆட
தடை போட்டால் ஞாயமா
உன்னாலே பசி தூக்கம் இல்லை
எப்போதும் நெஞ்சுக்குள் தொல்லை
இனி மேல் ஏன் இந்த எல்லை

ஆசை கூடாது
மணமாலை தந்து ஹோய்
சொந்தம் கொண்டு மஞ்சம் கண்டு
லீலைகள் காண்போமே

பேசக் கூடாது

காலைப் பனியும் நீ கண்மணியும் நீ
என் கனவும் நீ
மாலை மயக்கம் நீ பொன் மலரும் நீ
என் நினைவும் நீ
ஊஞ்சல் ஆடும் பருவும் உண்டு
உரிமை தர வேண்டும்
நூலில் ஆடும் இடையும் உண்டு
நாளும் வர வேண்டும்
பல காலம் உனக்காக
மனம் ஏங்கி வாடுதே
வருகின்ற தை மாதம் சொந்தம்
அணிகின்ற மணிமாலை பந்தம்
இரவோடும் பகலோடும் இன்பம்

ஆசைக் கூடாது
மணமாலை தந்து ஹோய்
சொந்தம் கொண்டு மஞ்சம் கண்டு
லீலைகள் காண்போமே

பேசக் கூடாது
வெறும் பேச்சில் சுகம் ஹோய்
ஏதும் இல்லை வேகம் இல்லை
லீலைகள் காண்போமே

லால லா லா லா ...



Credits
Writer(s): Ilaiyaraaja, Gangai Amaran, Pulamaipithan, Muhammed Metha
Lyrics powered by www.musixmatch.com

Link