Yaaru Yaaru Ivano

யாரு யாரு இவனோ
நூறு நூறு வீரனோ
ஐந்து விரல் அம்புக் கொண்டு
அகிலம் வெல்பவனோ

யாரு யாரு இவனோ
நூறு நூறு வீரனோ
ஐந்து விரல் அம்புக் கொண்டு
அகிலம் வெல்பவனோ

சூரிய வட்டத்துக்குத் தேய்பிறை என்றும் இல்லை
ஓயாத வங்கக்கடல் ஓய்வாய் நிற்குமோ
உச்சத்தை தீண்டும் வரை அச்சம் தேவை இல்லையே...

நெற்றியில் பொட்டு வைத்த உன் தாய் நெஞ்சில் உண்டு
வெற்றியை வாங்கித்தரும் தந்தை உண்டடா
ஊருக்குள் தண்ணீர் இல்லா கண்கள் உந்தன் கண்கள்தான்...

ஒற்றைக் கண்ணில் தூங்கிடு
உன்னை நீயே தாங்கிடு
நீண்ட வாழ்க்கை வாழ்ந்திடு
ஹே நீயா நானா பார்த்திடு

ஒற்றைக் கண்ணில் தூங்கிடு
உன்னை நீயே தாங்கிடு
நீண்ட வாழ்க்கை வாழ்ந்திடு
ஹே நீயா நானா பார்த்திடு

வேங்கை புலி இவனோ
வீசும் புயல் இவனோ
தாகம் கொண்டு தீயைத் தின்று
வாழும் எரிமலையோ

நீ கொண்ட கைகள் ரெண்டும் யானைத் தந்தங்கள்
கைக் கொண்ட ரேகை எல்லாம் புலியின் கோடுகள்
நீ போட்ட எல்லைக் கோட்டை
எவன்தான் தாண்டிடுவான்...

புத்தனின் போதனைகள் கொஞ்சம் தள்ளி வைப்பாய்
அய்யனார் கத்தி என்ன ஆப்பிள் வெட்டவா
உன் பார்வை சுட்டெரித்தால் பாறை கூழாங்கற்கள்தான்



Credits
Writer(s): Kabilan, Srikanth Deva
Lyrics powered by www.musixmatch.com

Link