Mayakkamenna

மயக்கமென்ன இந்த மௌனம் என்ன
மணி மாளிகை தான் கண்ணே

மயக்கமென்ன இந்த மௌனம் என்ன
மணி மாளிகை தான் கண்ணே

தயக்கம் என்ன இந்தச் சலனம் என்ன
அன்புக் காணிக்கை தான் கண்ணே

கற்பனையில் வரும் கதைகளிலே
நான் கேட்டதுண்டு கண்ணா
என் காதலுக்கே வரும் காணிக்கை என்றே
நினைத்ததில்லை கண்ணா

தேர் போலே ஒரு பொன்னூஞ்சல்
அதில் தேவதை போலே நீ ஆட
பூவாடை வரும் மேனியிலே
உன் புன்னகை இதழ்கள் விளையாட

கார்காலம் என விரிந்த கூந்தல்
கன்னத்தின் மீதே கோலமிட
கை வளையும் மை விழியும் கட்டியணைத்து கவி பாட

மயக்கமென்ன இந்த மௌனம் என்ன
மணி மாளிகை தான் கண்ணே

அன்னத்தைத் தொட்ட கைகளினால்
மதுக் கிண்ணத்தை இனி நான் தொட மாட்டேன்
கன்னத்தில் இருக்கும் கிண்ணத்தை எடுத்து
மதுவருந்தாமல் விட மாட்டேன்

உன்னையல்லால் ஒரு பெண்ணை இனி நான்
உள்ளத்தினாலும் தொட மாட்டேன்
உன் உள்ளம் இருப்பது என்னிடமே
அதை உயிர் போனாலும் தர மாட்டேன்

மயக்கமென்ன இந்த மௌனம் என்ன
மணி மாளிகை தான் கண்ணே

தயக்கம் என்ன இந்தச் சலனம் என்ன
அன்புக் காணிக்கை தான் கண்ணே
அன்புக் காணிக்கை தான் கண்ணே



Credits
Writer(s): Kannadhasan, K V Mahadevan
Lyrics powered by www.musixmatch.com

Link