Kattruvaanga Ponen

காற்று வாங்க போனேன்
ஒரு கவிதை வாங்கி வந்தேன்
நான் காற்று வாங்க போனேன்
ஒரு கவிதை வாங்கி வந்தேன்
அதைக் கேட்டு வாங்கிப் போனாள்
அந்தக் கன்னி என்னவானாள்

நான் காற்று வாங்க போனேன்
ஒரு கவிதை வாங்கி வந்தேன்

என் உள்ளம் என்ற ஊஞ்சல் அவள் உலவுகின்ற மேடை
என் பார்வை நீந்தும் இடமோ அவள் பருவம் என்ற ஓடை
அவள் கேட்டு வாங்கிப் போனாள் அந்தக் கன்னி என்னவானாள்

நான் காற்று வாங்க போனேன்
ஒரு கவிதை வாங்கி வந்தேன்

நடை பழகும்போது தென்றல் விடை சொல்லி கொண்டு போகும்
அந்த அழகு ஒன்று போதும் நெஞ்சை அள்ளிக் கொண்டு போகும்
அவள் கேட்டு வாங்கிப் போனாள்
அந்தக் கன்னி என்னவானாள்

நான் காற்று வாங்க போனேன்
ஒரு கவிதை வாங்கி வந்தேன்

நல்ல நிலவு தூங்கும் நேரம் அவள் நினைவு தூங்கவில்லை
கொஞ்சம் விலகி நின்ற போதும் இந்த இதயம் தாங்கவில்லை

காற்று வாங்க போனேன்
ஒரு கவிதை வாங்கி வந்தேன்
அதைக் கேட்டு வாங்கிப் போனாள்
அந்தக் கன்னி என்னவானாள்
நான் காற்று வாங்க போனேன்...



Credits
Writer(s): Vaalee, M.s. Viswanathan
Lyrics powered by www.musixmatch.com

Link