Kaasikku Pogum

காசிக்கு போகும் சந்நியாசி
உன் குடும்பம் என்னாகும் நீ யோசி
காசிக்கு போகும் சந்நியாசி
உன் குடும்பம் என்னாகும் நீ யோசி
கங்கைக்கு போகும் பரதேசி...
கங்கைக்கு போகும் பரதேசி
நீ நேற்று வரையிலும் சுகவாசி
காசிக்கு போகும் சந்நியாசி
உன் குடும்பம் என்னாகும் நீ யோசி

பட்டது போதும் பெண்ணாலே
பட்டது போதும் பெண்ணாலே
இதை பட்டினத்தாரும் சொன்னாரே
பட்டது போதும் பெண்ணாலே
இதை பட்டினத்தாரும் சொன்னாரே

அவ சுட்டது போதும்
சிவ சிவ சிவனே
சிவ சிவ சிவனே
ஆ-ஆ-ஆ
ஆ-ஆ-ஆ
சிவனே-ஆ-ஆ-ஆ

சுட்டது போதும் சொல்லாலே
நான் சுகப்படவில்லை அவளாலே
சுட்டது போதும் சொல்லாலே
நான் சுகப்படவில்லை அவளாலே

காசிக்கு காசிக்கு
காசிக்கு போறேன் ஆளவிடு
என்னை இனி மேலாவது வாழவிடு

ஆதரவான வார்த்தையை பேசி
அருமை மிகுந்த மனைவியை நேசி
ஆதரவான வார்த்தையை பேசி
அருமை மிகுந்த மனைவியை நேசி
அன்பெனும் பாடத்தை அவளிடம் வாசி
அவளை விடவா உயர்ந்தது காசி

அவதி படுபவன் படு சம்சாரி
அப்பா நீயோ பிரம்மச்சாரி
அவதி படுபவன் படு சம்சாரி
எங்கப்பா நீயோ பிரம்மச்சாரி
தலையணை மந்திரம் மூளையை கெடுக்கும்
தாரக மந்திரம் மோட்சத்தை கொடுக்கும்
தாரக மந்திரம் மோட்சத்தை கொடுக்கும்

காசிக்கு காசிக்கு
காசிக்கு போறேன் ஆளவிடு
என்னை இனி மேலாவது வாழவிடு

இல்லறம் என்பது நல்லறம் ஆகும்
இதுவே வள்ளுவன் சொன்ன சொல்லாகும்
இல்லறம் என்பது நல்லறம் ஆகும்
இதுவே வள்ளுவன் சொன்ன சொல்லாகும்
குடும்பத்தின் விளக்கு மனைவி என்றாகும்
கோபத்தை மறந்தால் சுவர்க்கம் உண்டாகும்
குடும்பத்தின் விளக்கு மனைவி என்றாகும்
கோபத்தை மறந்தால் சுவர்க்கம் உண்டாகும்

பக்தியின் வடிவம் சந்நியாசம்
புண்ணியவான்கள் சகவாசம்
அதுவே சந்தோஷம்
பக்தியின் வடிவம் சந்நியாசம்
புண்ணியவான்கள் சகவாசம்
அதுவே சந்தோஷம்

சக்தியின் வடிவம் சம்சாரம்
அவளே அன்பின் அவதாரம்
வேண்டாம் வெளி வேஷம்
சக்தியின் வடிவம் சம்சாரம்
அவளே அன்பின் அவதாரம்
வேண்டாம் வெளி வேஷம்

காசிநாதனே என் தெய்வம்
கட்டிய மனைவி குலதெய்வம்
காசிநாதனே என் தெய்வம்
கட்டிய மனைவி குலதெய்வம்
மனைவியும் தெய்வமும் ஒன்றில்லை
மனைவி இல்லாமல் தெய்வம் இல்லை
மனைவியும் தெய்வமும் ஒன்றில்லை
மனைவி இல்லாமல் தெய்வம் இல்லை

சரியோ, இனி அவளுடன் இருப்பது சரியோ
அவள் துணையினை பிரிவது முறையோ
பகை தான் வளரும்
பகையே அன்பாய் மலரும்
பிரிந்தவர் இணைந்திட படுமோ
கலந்தவர் பிரிந்திட தகுமோ
இல்லறம் இல்லறமே

காசிக்கு போகும் சந்நியாசி
உன் குடும்பம் என்னாகும் நீ யோசி
காசிக்கு போகும் சந்நியாசி
உன் குடும்பம் என்னாகும் நீ யோசி



Credits
Writer(s): Vaalee, M.s. Viswanathan
Lyrics powered by www.musixmatch.com

Link