Kadhal Indru

காதல் இன்று இப்போது ஒரு விஷயம் இல்லடா

காதல் இன்று இப்போது ஒரு விஷயம் இல்லடா
மேலில் நாம் தட்டி விடும் ஒரு தூசு போலடா
கண்டவுடன் பத்திக்கொள்ளும் காதல் இது
உள்ளத்திலே தொத்திக்கொள்ளும் வியாதி இது

உள்ளபடி காதல் இப்போ சுத்தம் இல்லே
உண்மை இதை சொன்னா ஒன்னும் குத்தமில்லே
ஒரு ice cream parlour'ல் AC theatre'ல் காதல் முடிஞ்சு போகும்

காதல் இன்று இப்போது ஒரு விஷயம் இல்லடா
மேலில் நாம் தட்டி விடும் ஒரு தூசு போலடா

காதலியை இன்னொருத்தன் கட்டிக்கொண்ட போது
தாடி வளர்த்த தேவதாஸ் இன்று யாரும் இல்லடா
காதலியை விட்டு விட்டு பைத்தியமாய் ஆகி
பாலைவனத்தில் சுற்றி திரியும் மஜ்னு யாரும் இல்லடா

உண்மை காதலே இன்று ஏதடா
பெண்ணும் ஆணுமே செய்யும் தவறடா
அன்புத் தோழனே கொஞ்சம் கேளடா
ஆசை என்பது காதல் இல்லடா
இன்று உள்ள காதலர்க்கு
இன்னும் இந்த ஞானம் வர்லடா

காதல் இன்று இப்போது ஒரு விஷயம் இல்லடா
மேலில் நாம் தட்டி விடும் ஒரு தூசு போலடா

அன்று வந்த காதல் எல்லாம் ஆழமுள்ள காதல்
சாகும் வரைக்கும் மாறிடாமல் அது நிலைத்து நின்றது
காசு பணம் பார்த்துக்கிட்டு இன்று வரும் காதல்
காலை மலர்ந்து மாலை உதிரும் ஒரு பூவை போன்றது

மனதின் கணக்கிலே காதல் வளரலாம்
விதியின் கணக்கிலே அதுவும் விலகலாம்
ஒன்று சேர்வதால் காதல் உயர்ந்ததா
பிரிந்து போவதால் காதல் தாழ்ந்ததா
காதலெனும் மாயவலை கண்ணை கட்டி நம்மை ஆட்டுது

காதல் இன்று இப்போது ஒரு விஷயம் இல்லடா
மேலில் நாம் தட்டி விடும் ஒரு தூசு போலடா

கண்டவுடன் பத்திக்கொள்ளும் காதல் இது
உள்ளத்திலே தொத்திக்கொள்ளும் வியாதி இது
உள்ளபடி காதல் இப்போ சுத்தம் இல்லே
உண்மை இதை சொன்னா ஒன்னும் குத்தமில்லே
ஒரு ice cream parlour'ல் AC theatre'ல் காதல் முடிஞ்சு போகும்

காதல் இன்று இப்போது ஒரு விஷயம் இல்லடா
மேலில் நாம் தட்டி விடும் ஒரு தூசு போலடா



Credits
Writer(s): Ilaiyaraaja, Muthulingam
Lyrics powered by www.musixmatch.com

Link