Malargale

மலர்களே மலர்களே மலர வேண்டாம் உறங்கிடுங்கள்
அவசரம் எதுவுமே இன்று இல்லை ஓய்விடுங்கள்

தென்றல் தோழனை அழைத்து வந்து
தினம் விருந்து கொடுத்து விட்டு
வம்பு செய்தீர்கள் சுவைத்து கொண்டு
சிரித்து முறைத்து விருப்பம் போல வாழு

மலர்களே மலர்களே மலர வேண்டாம் உறங்கிடுங்கள்
அவசரம் எதுவுமே இன்று இல்லை ஓய்விடுங்கள்

ஆடைகள் சுமை தாண்டி
அதை முழுதும் நீக்கி விட்டு குளித்தேன்
யார் யேனும் பார்பார்கள்
என்று கவலை ஏதும் இன்றி கழித்தேன்
குழந்தை என மீண்டும் மாறும் ஆசை
எல்லோர்க்கும் இருக்கிறதே
சிறந்த சில நொடிகள் வாழ்ந்து விட்டேன்
என் உள்ளம் சொல்கிறதே
அழைக்கிற குரலுக்கு வந்துவிடவே
அட இங்கு பணிப் பெண்கள் யாருமில்லையே
இந்த விடுதலைக்கு இணை இன்று ஏதுமில்லயே
அடடா கண்டேன் எனக்குள் ஆதிவாசி

மலர்களே மலர்களே மலர வேண்டாம் உறங்கிடுங்கள்
அவசரம் எதுவுமே இன்று இல்லை ஓய்விடுங்கள்

நீரோடு ஒரு காதல்
கடல் அலையில் கால் நனைய நடப்பேன்
ஆகாயம் என்னை பார்க்க
மணல் வெளியில் நாள் முழுதும் கிடப்பேன்
புதிய பல பறவை கூட்டம் வானில்
பறந்து போகிறதே
சிறகு சில உதிர்த்து நீயும் வா வா
என்றே தான் அழைக்கிறதே
முகத்துக்கு ஒப்பனைகள் தேவை இல்லையே
முகம் காட்டும் கண்ணாடிக்கு வேலையில்லையே
அசடுகள் வழிந்திட ஆள்கள் இல்லையே
காலம் நேரம் கடந்த ஞான நிலை

மலர்களே மலர்களே மலர வேண்டாம் உறங்கிடுங்கள்
அவசரம் எதுவுமே இன்று இல்லை ஓய்விடுங்கள்



Credits
Writer(s): Yuvan Shankar Raja, S Thamari
Lyrics powered by www.musixmatch.com

Link