Theninum Mayilum

தேன் இனிமையிலும் இயேசுவின் நாமம் திவ்ய மதுரமாமே
அதை தேடியே நாடி ஓடியே வருவீர் திருச்சபையானோரே

காசினிதனிலே நேசமதாக கஷ்ட்டத்தை உத்தரித்தே பாவ
கசடதை அறுத்து சாபத்தை தொலைத்தார் கண்டுனர் நீ மனமே
-தேன் இனிமையிலும்
பாவியை மீட்கத்தாவியே உயிரைத்தாமே ஈந்தவராம்
பின்னும் நேமியாம் கருனை நிலைவரம் உண்டு நிதம் துதி என் மனமே
-தேன் இனிமையிலும்
காலையில் பனிப்போல் மாயமாய் உலகம் உபாயமாய் நீங்கிவிடும்
என்றும் கர்த்தரின் பாதம் நிச்சயம் நம்பு கருத்தாய் நீ மனமே
-தேன் இனிமெயிலும்
துன்பத்தில் இன்பம் தொல்லையில் நல்ல துணைவராம் இயேசுவிடம்
நீயும் அன்பதாய் சேர்ந்தால் அணைத்துனை காப்பார் ஆசைக்கொல் நீ மனமே
-தேன் இனிமையிலும்



Credits
Writer(s): Gnani, Traditional
Lyrics powered by www.musixmatch.com

Link