Sollaayo Sola Killi

சொல்லாயோ சோலைக்கிளி
சொல்லும் உந்தன் ஒரு சொல்லில்
உயிர் ஒன்று ஊசல் ஆடுதே

சொல்லாயோ சோலைக்கிளி
சொல்லும் உந்தன் ஒரு சொல்லில்
உயிர் ஒன்று ஊசல் ஆடுதே

இந்த ஊமை நாடகம் முடிந்ததே...
குயில் பாடி சொல்லுதே நம் காதல் வாழ்கவே

சொல்லாது சோலைக்கிளி
சொல்லி கடந்த காதல் இது
கண்ணோரம் காதல் பேசுதே

பச்சைக்கிளையில் இலைகளுக்குள்ளே
பச்சைக்கிளி ஒளிதல் போல
இச்சை காதல் நானும் மறைத்தேன்

பச்சைக்கிளி மூட்டை போல
வெட்கம் உன்னை காட்டி கொடுக்க
காதல் உள்ளம் கண்டு பிடித்தேன்

பூவில்லாமல் சோலை இல்லை
பொய் இல்லாமல் காதல் இல்லை
பொய்யை சொல்லி காதல் வளர்த்தேன்

பொய்யின் கையில் ஆயிரம் பூட்டு
மெய்யின் கையில் ஒற்றை சாவி
எல்லா பூட்டும் இன்றே திறந்தேன்

சொல்லாது சோலைக்கிளி
சொல்லி கடந்த காதல் இது
கண்ணோரம் காதல் பேசுதே

சொல்லாயோ சோலைக்கிளி
சொல்லும் உந்தன் ஒரு சொல்லில்
உயிர் ஒன்று ஊசல் ஆடுதே

இந்த ஊமை நாடகம் முடிந்ததே
குயில் பாடி சொல்லுதே நம் காதல் வாழ்கவே

சேராத காதலர்க்கெல்லாம்
சேர்த்து நாம் காதல் செய்வோம்
காதல் கொண்டு வானை அளப்போம்

புதிய கம்பன் தேடி பிடித்து
லவ்வாயணம் எழுதிட செய்வோம்
நிலவில் கூடி கவிதை படிப்போம்

கொஞ்சம் கொஞ்சம் ஊடல் கொள்வோம்
நெஞ்சும் நெஞ்சும் மோதிக்கொள்வோம்
சண்டை போட்டு இன்பம் வளர்ப்போம்

பூவும் பூவும் மோதிக்கொன்டால்
தேனை தானே சிந்தி சிதறும்
கையில் அள்ளி காதல் குடிப்போம்



Credits
Writer(s): Vairamuthu
Lyrics powered by www.musixmatch.com

Link