Arupukottai Akka Ponnu

அருப்புக்கோட்டை அக்கா பொண்ணு
சிரிப்பா சிரிக்குது சின்னக்கண்ணு
சேலை உடுத்தி வாழைக்கண்ணு பழகி பார்த்த பச்ச மண்ணு
சிற்பம் போல சின்னபொண்ணு சிக்குன்னு இருக்குது
கற்பமாக்கும் சக்தி ஒம்ம கண்ணில் இருக்குது
தித்திக்கும் தேவயானி அடி தினந்தோறும் தேவைதான் நீ

அருப்புக்கோட்டை அக்கா பொண்ணு
சிரிப்பா சிரிக்குது சின்னக்கண்ணு

சித்திரை மாசம் வெயிலடிக்கும் ஐப்பசி மாசம் மழையடிக்கும்
கார்த்திகை மாசம் புயலடிக்கும் பனிரெண்டு மாசமும் எதிலடிக்கும்
கண்ணில் இருக்கும் இமையடிக்கும் கடலில் இருக்கும் அலையடிக்கும்
காலந்தோறும் காத்தடிக்கும்
மார்பெனும் கூட்டுக்குள் மனமடிக்கும்

மனச தொறந்து வையடி
எந்நாளும் மதிய விருந்து வையடி
உன் வெட்கம் என்னும் கறைபோக முத்தம் போட்டு துவைக்கனும்
முத்தார முகம் கொடடி

வளைஞ்சி வளைஞ்சி கேட்கிறியே
வளையல் உடைக்க பார்க்கிறியே
பிச்சுபூவு நந்தவனத்தே... மிரண்டிக்கொண்ணு தாக்குறியே
ஆறு மலையெல்லாம் ஜெயிக்கிறேன்
இந்த ஆறுகஷ புடவைக்கு தோக்குறேன்

அருப்புக்கோட்டை அக்கா பொண்ணு
சிரிப்பா சிரிக்குது சின்னக்கண்ணு

முத்தம் எனக்கொன்னும் புதுசு இல்லை
முத்தான சொகமும் புதுசு இல்லை
ஆனாலும் தீண்டு ருசி இருக்கு
ஐயா கையில் வெசையிருக்கு

நம்மைபோல் இன்பம் அடஞ்சதில்லை
நாநூறு முத்தம் கொடுத்ததில்லை
ஆனாலும் இன்னும் மிச்சமிருக்கு
ஆயிரத்து நூத்தி எட்டு வகையிருக்கு

போதும் போதும் எனக்கு அய்யோ பொறுமையில்லை எனக்கு
நீ கட்டில் மேலே வீடுகட்ட நானும் எங்கே ஈடுகட்ட பூபோல உடம்பெனக்கு
நிழலு தரையில விழுகையில நிலத்தில் ஏதும் காயமில்ல
பூவில் நுழையும் காத்தாக புகுந்து வருவேன் வாடிபுள்ளே
மல்லிகப்பூ வாசம் இன்னும் தீரல உங்க மதுர கொணமே மாறலே

அருப்புக்கோட்டை அக்கா பொண்ணு
சிரிப்பா சிரிக்குது சின்னக்கண்ணு
சிற்பம் போல சின்னபொண்ணு சிக்குன்னு இருக்குது
கற்பமாக்கும் சக்தி ஒம்ம கண்ணில் இருக்குது
தித்திக்கும் தேவயானி அடி தினந்தோறும் தேவைதான் நீ

அருப்புக்கோட்டை அக்கா பொண்ணு
சிரிப்பா சிரிக்குது சின்னக்கண்ணு
சேலை உடுத்தி வாழைகண்ணு பழகி பார்த்த பச்ச மண்ணு



Credits
Writer(s): Vairamuthu
Lyrics powered by www.musixmatch.com

Link