Poi Varavaa

மெல்ல விடை கொடு விடை கொடு மனமே
இந்த நினைவுகள் நினைவுகள் கனமே
தாய் மண்ணே செல்கின்றோம் தூரம் தூரம்
இங்கு உறவுகள் பிரிவுகள் வருதே
சில அழகிய வலிகளும் தருதே
போகின்றோம் போகின்றோம் தூரம் தூரம்

ஒ ஒ ஹோ ஒ ஒ ஹோ
எனை விட்டுச் செல்லும் உறவுகளே
ஒ ஒ ஹோ ஒ ஒ ஹோ
உயிர் தொட்டுச் செல்லும் உணர்வுகளே
போய் வரவா

நண்பன் முகம் நெஞ்சில் நடந்து போகும்
காதல் தென்றல் கூட கடந்து போகும்
இப்பயணத்தில் பொன் நினைவுகள் நெஞ்சடைக்குமே
காடு மலை செல்ல துவங்கும் போதும்
நெஞ்சில் சொந்தங்களின் நினைவு மோதும்
கைக்குழந்தையை அணைக்கவே மெய் துடிக்குமே
ஆயிரம் ஆயிரம் எண்ண அலைகள் அலைகள் அலைகள் நெஞ்சோடு
ஆயினும் ஞாபகம் உயிர் துடிப்பாய் துடிக்கும் எங்கள் மண்ணோடு

போய் வரவா(போய் வரவா)

எங்கே மகன் என்று எவரும் கேட்க
ராணுவத்தில் என தாயும் சொல்ல
அத்தருணம் போல் பொற்பதக்கங்கள் கை கிடைக்குமா
நாட்டுக்கென்றே தன்னை கொடுத்த வீரம்
ஆடை மட்டும் வந்து வீடு சேரும்
அப்பெருமை போல் இவ்வுலகிலே வேறிருக்குமா
தேசமே தேசமே என் உயிரின் உயிரின் உயிரின் தவமாகும்
போரிலே காயமே என் உடலின் உடலின் உடலின் வரமாகும்

போய் வரவா(போய் வரவா)

மெல்ல விடை கொடு விடை கொடு மனமே
இந்த நினைவுகள் நினைவுகள் கனமே
தாய் மண்ணே செல்கின்றோம் தூரம் தூரம்
இங்கு உறவுகள் பிரிவுகள் வருதே
சில அழகிய வலிகளும் தருதே
போகின்றோம் போகின்றோம் தூரம் தூரம்

ஒ ஒ ஹோ ஒ ஒ ஹோ
என்னை விட்டு செல்லும் உறவுகளே
ஒ ஒ ஹோ ஒ ஒ ஹோ
உயிர் தொட்டு செல்லும் உணர்வுகளே

போய் வரவா(போய் வரவா)



Credits
Writer(s): Harris Jayaraj, Vijay Pa
Lyrics powered by www.musixmatch.com

Link