Annaiyin Karuvil

அன்னையின் கருவில் கலையாமல்
பிறந்தாயே அப்போதே மனிதா நீ ஜெயித்தாயே (2)
கஷ்டங்களை தாங்கு வெற்றி உண்டு
மேடு பள்ளம் தானே வாழ்க்கை இங்கு கனவுகள்
காணு தூக்கம் கொன்று நடந்திடும் என்று நம்பி இன்று
முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை இன்மை புகுத்தி
விடும் இடுக்கண் வருங்கால் நகுக அதனை அடுத்தூர்வ அஃதொப்ப தில்
வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம் உள்ளத் தனையது உயர்வு
தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன் மெய் வருத்தக் கூலி தரும்
விதைக்குள் தூங்கும் ஆல மரம் கண்ணுக்குத் தெரியாது
அது மரமாய் வளரும் காலம் வரும் மண்ணுக்கும் உறங்காது
நீ தேடும் சிகரம் தூரம் இல்லை நடப்பதை நிறுத்தாதே
வெறும் துளி தான் இங்கே கடலாகும் நம்பிக்கை தொலைக்காதே
மீண்டும் மீண்டும் பாதம் பட்டால்
பாறை கூட பதை ஆகும்
முன்னால் வைத்த காலை நீயும் பின்னால் எடுக்காதே
பூக்கள் பூக்க வேர்கள் தேவை வெற்றிக்கிங்கே வேண்டும்
வேர்வை உன் கை ரேகை தேய்ந்தா போகும் உழைப்பதை நிறுத்தாதே
உன்னால் என்ன முடியும் என்று உனக்கே தெரியாது உன்
சக்தியை நீயும் புரிந்து கொண்டால் சாதிக்க தடை ஏது
முயற்சிகள் செய்து தோற்ப்பதெல்லாம் தோல்விகள்
கிடையாது விழுந்து விடாம் யாரும் இங்கே எழுந்தது கிடையாது
இல்லை என்ற சொல்லை கூட இல்லை என்று தூக்கிப்
போடு நாளை உன்னை மேலே ஏற்றும் துணிச்சலை இழைக்காதே
வீழ்ந்தால் கூட பந்தாய் மாறு வேகம் கொண்டு மேலே ஏறு
முந்திக் கொண்டு முன்னால் ஓடு முயற்சியை நிறுத்தாதே



Credits
Writer(s): Vijay Antony, Annamalai
Lyrics powered by www.musixmatch.com

Link